'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Oct 29, 2018

காலக்கணிதம்

தமிழகழ்வன்சுப்பிரமணி

தமிழர்தம் காலக் கணிதம் எங்கே போனது?

ஆண்டுப் பெயர்கள் யாவும் வடமொழிச் சொற்களாய் இருக்கின்றன. அவை மட்டுமன்றி, அவற்றோடு தொடர்புடைய சோதிடக் கணக்குகள் யாவற்றையும் அலசிப் பாருங்கள். தமிழர் காட்டும் பெரும்பொழுது, சிறுபொழுது என்பன தவிர, எவையெல்லாம் சோதிடம் என்ற பெயரில் திணிக்கப்பட்டிருக்கின்றன எனத் தெரியும்.

வடசொல்
தமிழில் மீன்களின் பெயர்
தமிழில் திங்களின் பெயர்
சைத்ரம்
சித்திரை
சித்திரை
வைசாகம்
விசாகம்
வைகாசி
ஜேஷ்டம்
கேட்டை, மூலம்
ஆனி
ஆஷாடம்
பூராடம்
ஆடி
சிராவணம்
திருவோணம், அவிட்டம்
ஆவணி
பாத்ரபதம்
பூரட்டாதி
புரட்டாசி
ஆஸ்வீனம்
அஸ்வினி
ஐப்பசி
கார்த்தீகம்
கார்த்திகை
கார்த்திகை
ஆக்ரஹாயனம்
மிருகசீரிஷம்
மார்கழி
பௌஷம்
பூசம்
தை
மாகம்
மகம்
மாசி
பால்குணம்
உத்திரம்
பங்குனி

என்ற வரிசையில் சித்திரை, வைகாசி என்ற சொற்களுக்கெல்லாம், தமிழில் பொருள் சொல்ல முடியுமா? அவை தமிழ்ப்பெயர்களே என்று சாதிப்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? தமிழ்ப்படுத்தப்பட்ட பெயர்களா? தூய தமிழ்ப்பெயர்களா? என்ற ஐயத்தை ஆதாரத்தோடு விளக்குவார் யார்? அல்லது தமிழிலிருந்து அந்தச் சொற்கள் சென்று வடமொழிக்கேற்ப மாற்றம் கொண்டன என்றால், அவற்றின் தமிழ்ச்சொற்களின் வேரை ஆராய்ந்து சொல்பவர் யார்?

பின்வரும் பட்டியலை உற்று நோக்குக.

அஷ்டாங்கத்தில் முதற்பிரிவு :திரியாங்க விவரம்
முதலாவது அங்கம் : சதுர்யுகங்கள் (4) – கிரேதாயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம்
·       இரண்டாவது அங்கம் : வருட நாமங்கள் (60) - பிரபவ முதல அக்ஷய வரை
·       மூன்றாவது அங்கம் : மாத நாமங்கள் (12) - இவைதான் சித்திரை முதல் பங்குனி வரையிலான பெயர்கள்

இரண்டாவது பிரிவு: பஞ்சாங்க விவரம்
·    முதலாவது திதி நாமங்கள் (15): பிரதமை, துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை அல்லது பௌர்ணமி வரை
·     இரண்டாவது வார நாமங்களாவன (7): ஞாயிறு முதல் சனி வரை
·     மூன்றாவது நட்சத்திரங்களாவன (27): அசுவினி முதல் ரேவதி வரை
·      நான்காவது அங்கம் யோக நாமங்களாவன (27): விஷ்கம்பம் முதல் வைதிருதி வரை
·  ஐந்தாவது கரணமும் அவற்றின் உருவ நாமங்களும் (11): பவம் – சிங்கம், பாலவம் – புலி, கௌலவம் – பன்றி, தைதுளை – கழுதை, கரசை – யானை, வனகை – எருது, பத்திரை – கோழி, சகுனி – காக்கை, சதுஷ்பாதம் – நாய், நாகவம் – பாம்பு, கிமிஸ்துக்கினம் – புழு
மேலும்
·      நவக்கிரகங்கள் – சூரியன் முதல் இராகு, கேது வரை
·     பன்னிரு இராசிகள் – மேஷம் முதல் மீனம் வரை
·     சப்த வருஷங்கள் – பரதம், கிம்புருடம், அரி, இளாவிருதம், ரம்மியதம், ஐரணம், குரு
· எட்டு ஆப்தங்கள் – பாண்டவாப்தம், விக்கிரமாதித்தாப்தம், சாலிவாகன சகாப்தம், போஜராஜாப்தம், கொல்லமாப்தம், ராமதேவாப்தம், பிரதாப ருத்ராயாப்தம்
·       இரண்டு அயனங்கள் – உத்தராயனம், தக்ஷணாயனம்
·      சிறுபொழுதுகள் – மாலை, ஜாமம், வைகறை, விடியல், நண்பகல், எற்பாடு
·      பெரும்பொழுது இருதுக்கள் – வசந்தம், கிரீஷ்மம், வர்ஷம், சரத், ஹேமந்தம், சசிரம்.
·      சூரியன் வீதி மாதங்கள் – மேஷ வீதி, ரிஷப வீதி, மிதுன வீதி
·      சங்கற்ப மாதங்கள் – சைத்திரம் முதல் பால்குனம் வரை
·    பக்ஷம் இரண்டு – பூர்வ பக்ஷம், அமர பக்ஷம்; சுக்கில பக்ஷம், கிருஷ்ண பக்ஷம்; வளர்பிறை, தேய்பிறை.
·        நாளின் பகற்கூறு – பூர்வான்னம், பாரான்னம், மத்தியான்னம், அபரான்னம், சாயான்னம்
·        திரிவித இராசிப் புணர்ச்சிகள் – சரம், ஸ்திரம், உபயம்
·     முக்குண வேளை – சாத்துவீகம், இராசதம், தாமதம் (ஸத்வ (ஸாத்வீகம்), ரஜோ (இராஜஸம்), தமோ (தாமஸம்))
·         அமிர்தாதி யோகங்கள் – அமிர்தம், சித்தம், மரணம், பிரபலாரிஷ்டம்
·         அனந்தாதி யோகங்கள் – 27 (அனந்தம் முதல் வர்த்தமானம் வரை)

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். அவ்வளவும் வடசொற்களால் ஆனவையே. பல சொற்களுக்குத் தமிழ்ப்படுத்தப்பட்ட சொற்களைக் கொண்டு பயன்படுத்தியும், பல சொற்கள் அப்படியே வடசொற்களாலேயே எடுத்தாளப்பட்டும்இருக்கின்றன.

அவ்வளவு ஏன்?
·         சிறுபொழுதுகள், பெரும்பொழுதுகளுக்குத் தமிழ்ப்பெயர்களிருக்க, அவற்றுக்கு வடசொற்களைத் தமிழில் வழக்கத்துக் கொண்டுவந்து அழைப்பானேன்?
·         தமிழ் இலக்கியங்கள்கூடச் சொல்லாத பல்வேறு கணக்குகளைச்சோதிடம் என்ற பெயரில் புகுத்தியது ஏன்? அவை யாவற்றுக்கும் வடசொற் பெயர்களே இருப்பது ஏன்?

‘சோதிட கிரக சிந்தாமணி’ என்னும் நூல், தமிழ்ச்செய்யுளால் செய்யப்பட்ட சோதிட நூல். இதன் ஆசிரியர், முடிந்த அளவு வட சொற்களைத் தமிழ்ப்படுத்தி அரும்பாடுபட்டிருப்பது தெரிகிறது. இன்னும் பல வடசொற்களைத் தமிழ்ப்படுத்த விரும்பாமல், தமிழ்ப்படுத்தினால் அவற்றின் அடையாளம் தெரியாமல் போய்விடுமே என்ற அச்சத்தால், அப்படியே பயன்படுத்தி இருப்பதும் தெளிவாக விளங்குகிறது.

இன்றைய தமிழர் நாட்காட்டி, பஞ்சாங்கங்கள் கூறும் 27 நட்சத்திரங்களும், அந்தந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் மொழிமுதல் எழுத்துகளும் இங்கே காண்க.

நட்சத்திரம் - எழுத்துகள்
1. அசுபதி - சு, சே,சோ, ல
2. பரணி - லி, லு,லே,லோ
3. கிருத்திகை - அ, இ, உ, எ
4. ரோகிணி - ஒ, வ,வி, வு
5. மிருகசீரிஷம் - வே,வோ,கா, கி
6. திருவாதிரை - கு, க,ச, ஞ
7. புனர்பூசம் - கே,கோ,ஹ,ஹி
8. பூசம் - ஹூ,ஹே,ஹோ,ட
9. ஆயில்யம் - டி, டு,டே,டோ
10. மகம் - ம, மி,மு, மெ
11. பூரம் - மோ,ட, டி,டு
12. உத்திரம் - டே,டோ,ப, பி
13. அஸ்தம் - பூ, ஷ, ந, ட
14. சித்திரை - பே,போ, ர,ரி
15. சுவாதி - ரு, ரே,ரோ, த
16. விசாகம் - தி, து,தே,தோ
17. அனுஷம் - ந, நி,நு, நே
18. கேட்டை - நோ,ய, இ,பூ
19. மூலம் - யே,யோ,ப, பி
20. பூராடம் - பூ, த,ப, டா
21. உத்திராடம் - பே,போ,ஜ, ஜி
22. திருவோணம் - ஜூ,ஜே,ஜோ,கா
23. அவிட்டம் - க, கீ,கு, கூ
24. சதயம் - கோ,ஸ,ஸீ,ஸூ
25. பூரட்டாதி - ஸே,ஸோ,தா, தீ
26. உத்திரட்டாதி - து,ஞ,ச,ஸ்ரீ
27. ரேவதி - தே ,தோ, ச,சி

இவையெல்லாம் வடமொழியின் தாக்கம் என்பதைச் சொல்லித்தான் புரிய வேண்டுமா? இவற்றையெல்லாம் எளிதில் ஏற்றுக்கொள்ளும் இக்காலத் தமிழர்கள், எங்கே தமிழ்ப்பெயர்களைத் தம் பிள்ளைகளுக்கு இடப் போகிறார்கள்?

தொல்காப்பியமும், நன்னூலும் எடுத்துச் சொன்ன, வடசொற்களைத் தமிழ்ப்படுத்தும் விதிகளுக்கு உட்பட்டு இந்நூல் பல சொற்களைத் தமிழ்ப்படுத்தி நமக்கு வழங்கி இருக்கிறது.குழந்தைகளுக்குப் பெயரிடும்போது, சோதிடத்தில் சொல்லப்படும் ஒவ்வொரு விண்மீன் கூட்டத்திற்கும் நந்நான்கு எழுத்துகளைக் கொடுத்து, மொழிமுதலாக வைத்துக் கொள்வது வழக்கம். ஆனால், அவற்றில் வடவெழுத்துகளும் கலந்திருப்பதனால், தமிழ் எழுத்துகளை மட்டுமே கொண்ட பட்டியலும் எழுந்துள்ளது.

அ, ஆ, இ, ஈ - கார்த்திகை
வ, வா, வி, வீ - ரோகணி
வெ, வே, வை, வௌ - மிருகசீரிடம்
கு, கூ - திருவாதிரை
கெ, கே, கை - புனர்பூசம்
கொ, கோ, கௌ - பூசம்
மெ, மே, மை - ஆயிலியம்
ம, மா, மி, மீ, மு, மூ - மகம்
மொ, மோ, மௌ - பூரம்
ப, பா, பி, பீ - உத்திரம்
பு, பூ - அஸ்தம்
பெ, பே, பை, பொ, போ, பௌ - சித்திரை
த, தா - சோதி
தி, தீ, து, தூ, தெ, தே, தை - விசாகம்
ந, நா, நி, நீ, நு, நூ - அனுஷம்
நெ, நே, நை - கேட்டை
யு, யூ - மூலம்
உ, ஊ, எ, ஏ, ஐ - பூராடம்
ஒ, ஓ, ஔ - உத்திராடம்
க, கா, கி, கீ - திருவோணம்
ஞ, ஞா, ஞி - அவிட்டம்
தொ, தோ, தௌ - சதயம்
நொ, நோ, நௌ - பூரட்டாதி
யா - உத்திரட்டாதி
ச, சா, சி, சீ - ரேவதி
சி, சூ, செ, சே, சை - அசுபதி
சொ, சோ, சௌ - பரணி

அம்முதலோர் நான்கதும் வவ்விரு நான்குள்ள துங்குவ்
வாக விரண்டிரு மூன்று மெம்முதலாய் மூன்று
யம்முதலா றல்லதும் பந்நான் கிரண்டல்ல துந்தவ்
வாக விரண்டே ழுநக ரத்ததுவா யாறு
நெம்முதலோர் மூன்றுயு யூவு கரமுத லைந்து
நின்ற துமக்கவி னான்கு ஞம்முதலோர் மூன்றுந்
தொம்முதலோர் மூன்றது நொம்முதன் மூன்றும் யாவு
சொல்வி னான்கைந்தொரு மூன்றறு மின்றொட் டுளதே

மேற்கண்ட பட்டியல், வடவெழுத்துகளைத் தவிர்ப்பதற்காகச் ‘சோதிட கிரக சிந்தாமணி’ என்னும் நூலால் பரிந்துரைக்கப்பட்டது.ஆக, இந்தக் கணக்குகள் எல்லாம் வடமொழியையே சார்ந்திருக்கத் தமிழர்தம் காலக்கணிதம் எங்கே போனது?

பொழுதுகளைத் தா தாயே......!


உலகப் பனிக்குடத்தைஉடைத்துப்பிறந்தவளே !
உலக மொழிகளுக்குன்பனிக்குடத்தை உடைத்தவளே !
தலைமகளே !தமிழ்நிலத்தின்தாய்மடியே ! உதிரத்தால்
விலைபோகாவீரத்தின்விளைநிலத்தைவிதைத்தவளே! |
*
முக்கனிக்கும் தேன்கொடுக்கமுத்தமிழ்ச்சொல் படைத்தவளே!
சொக்கவைக்கும் சொர்க்கத்தைச் சோர்வடைய வைப்பவளே !
விக்கலுக்கும் மருந்தாக விருந்தாகி விழைபவளே !
சிக்கலிலா செம்மொழியே !சீர்நிறைந்த   கவிநடையே !
*
உயிராகி மெய்யாகி உயிர்மெய்  உறவாகிப்
பயிராகி  நெஞ்சுக்குள்பால்வார்க்கும் தாய்நிறையே !
உயரத்தால் வான்துளைத்தும்உருவத்தால் தான் கிளைத்தும்
அயராது வேர்துளைத்தும்ஆள்கின்ற  அருந்தமிழே !
*
மூவேந்தர் பாவேந்தர்முற்றத்தில் விளையாடி
நாவேந்தும் மழலைகளின்நாநின்று நடனமாடி
வாளேந்து வீரத்தில்வந்துநின்று சுழன்றாடி
காவேந்தும் நதிமுகத்தில்காட்சிதரும் தாய்வரமே !
*
உனக்கான  நிகர்தேடி உலகமே    சுழல்கிறது !
கனத்தேதான் கண்சுற்றியுன்காலடியில் விழுகிறது !
இனம்மட்டும் தானுன்னைஅறியாமல் இழக்கிறது !
மனம்மட்டும் தாளாமல் மாயாது கொதிக்கிறது....!
*
உயிர்க்காற்றே உனைவிற்றும்உடல்வாங்கப் பறக்கின்றார் !
அயலார்க்குத் தாய்மடியைஅடகுவைக்கத் துடிக்கின்ற
பயல்களையும் உன்மடியில்பாலூட்டி வளர்க்கின்றாய் !
செயல்வடிவாய் தாங்கவந்தேன்செம்மொழிநீ !  வாழ்த்து !தாயே !
*
உனைவிற்றுப் பிழைக்கேன்நான் !உனைவிட்டும் ஓடேன்நான் !
சினைமாடாய் உனைசுமப்பேன்!சிகரங்கள் அளந்தெடுப்பேன் !
பனைபூக்கும் காலம்வரைபாவலன்நான் உயிர்த்திருப்பேன் !
நினைத்தாலே உயிர்கூட்டும்நின்னைநான் தொழுதிருப்பேன் !
*
தொழுகின்ற விழுதென்றன்தோள்நிமிர்த்த வா தாயே !
விழுமழையின் தூய்மைநான்விதைவிதைக்க வா தாயே !
அழுகையிலா தமிழ்நிலத்தைஅடையாளப் படுத்துதற்கே
பொழுதெல்லாம் உழைத்திருப்பேன் !பொழுதுகளைத் தா தாயே !

-துரைவசந்தராசன்

இரட்டைப் பனைமரம்


-விஜயகுமார் வேல்முருகன்


"டேய் காசி உண்மையா தான் சொல்றியாடா.."
"ஆமான்டா.. பரமா .. எங்க தாத்தாக்கூட நிறைய தடவ சொல்லியிருக்காங்க.. எங்க தாத்தாவும் நிறைய தடவ அதுக்கூட பேசியிருக்காங்களாம்..

Oct 8, 2018

அவளால். . .

நற்றமிழ்ச் சித்தன் விவேக்பாரதி

(ஐம்பதின்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

மனதுக்கு ளவளாலே மணியோசை கேட்கிறது
மகிழ்வெய்தி என்நெஞ்சம் தானாகப் பூக்கிறது
மகமாயி மாகாளி ஆதீப ராசக்தி
மகிமைகள் எண்ணிவிட என்னுள்ளே புதுச்சக்தி!
மண்மீதிங் கவளின்றி மலரேது கனியேது
மாடப்பு றாவேது மணமேது காயேது
மனத்தாட்டம் மாய்க்கின்ற மங்கைய ளவருளின்றி
மதியேது மகிழ்வேது மன்னுகின்ற கவியேது ?
மரமேது காற்றேது வளியேது புனலேது
மண்டுமிருட் காட்டுக்குள் விலங்குகளுந் தாமேது ?
மரணப்ப டுக்கைதனில் நாஞ்சென்று வீழ்கையிலும்
மார்போடு தாங்கிநம்மை மன்னித்து யிர்காத்து
மகிழ்த்து வாளே

அனலான சிறுபார்வை அகன்றோடும் தீயெண்ணம்
அழகான நுதல்காண ஆயிரக்க விப்பண்ணும்
அதுவாக வீழாதோ அகிலாண்ட நாயகியின்
அதிமதுர இதழ்காண ஆச்சர்யம் நேராதோ ?
அல்லோடும் பகலோடும் காலங்கள் தானோடும்
அந்திவரும் நிலவோடும் ஆதவனு மேயோடும்,
அபிராமி சிவகாமி சிந்துகின்ற அருளோசை
அண்டம்பி றழ்ந்தாலும் மாறாத உயிரோசை !
அவளாலே வையத்தில் ஆட்டங்கள் பாட்டங்கள் !
அவளாலே அகிலத்தில் விளைபயிரி னீட்டங்கள் !
அவளாலே அரசாங்கம் அவளாலே அருளோங்கும் !
அவளின்றி அசையாதோர் அணுகூட வகிலத்தில் !
அறிந்தி ருப்போம் !

உனதென்று மெனதென்றும் நீசொல்லும் செய்கைகள்
உனதல்ல எனதல்ல உண்மைப்பொ ருள்சக்தி
உமையம்மை செய்வினைகள் நாமந்த மகமாயி
உருட்டியே விளையாட ஏற்றவினைப் பொம்மைகள் !
உன்னதம வள்தானே உயிரோட்ட மவள்தானே
ஊறுறும் காலத்தில் உன்வாயு ரைக்கின்ற
உயிரான உளத்தோசை யெல்லாம வள்தானே
உணராத மாந்தருயிர் உறக்கமும வள்தானே !
உற்சாக மவள்தானே உத்வேக மவள்தானே
ஊருக்குள் பாருக்குள் நல்லரணு மவள்தானே
உந்துதலு மவள்தானே ஊசிமுனை மீதேறி
உல்லாசம் சல்லாபம் உள்ளூற வந்தெற்றி
உயர்த்து வாளே

கனவென்றும்  நனவென்றுங்  காட்சிப்பி ழையென்றுங் 
கருவென்றும்  உருவென்றும்  காணக்கி டைக்காத
கடவுளதன் உடலென்றும் ! கவியாகிக் கருத்தாகிக்
கண்டங்கள் அண்டங்கள் ஆள்கின்ற விசையென்றுங்
களவாட முடியாத நிலையான சொத்தென்றுங் !
காசினியின் வித்தென்றுங்  கட்டற்ற நதியென்றுங்
கருணையின் நிதியென்றுங்  கன்னியத்தின் விதியென்றுங் 
கண்ணுக்கு ளொளியென்றுங்  கவலைதீர்ப் பவளென்றுங்
காத்யாய ணிப்பெயரைக் காலமெல்லாம் சொல்லிடுவார்
கருமாரி யுருமாறி நமைவந்துக் காப்பாற்றிக்,
கடமைகள் உடைமைகள் கர்மத்தின் பயனென்று
கருதுதளை யெல்லாமுந்த் தாக்காமல், வந்தவைகள்
கடத்து வாளே!!

உமையாள் திருப்புகழ் (வண்ணப் பாடல்)

இளையரொடு லாவு தற்கும் இனியகதை பேசு தற்கும்
   இதயமுற வாடு தற்கும் - இயலாத
இழிபிறவி யோவெ னக்கு நியதியிது வோவு னக்கும்
    இமயமலை யாள ருக்கும் - இனியாளே!

தளையகல ஆதி சக்தி நிழல்விரிய நாளு முற்ற
   தடைவிலக நீதி யுக்தி - மொழிவாயே!
தவநெறியு மாக மத்தின் உயர்மொழியும் சீத மிக்க
   தமிழமுது மேது திக்கும் - அருளாளே!

வளைநுதலும் ஆணி முத்து வளமருவும் மேனி யுற்ற
   விரிசடையும் ஆளும் பத்து - தனிரூபம்
வளரவரு ளேகொ டுத்து வருமிடரை யேத டுத்து
   வயதிலுறு வாழ்வ ளிக்க - இசைவாயே!

களபமுலை மீது பட்டு மிளிருடையும் ஜோதி மிக்க
   கலையணியு மேத ரித்த - எழிலாளே!
கடவுளொரு மூவ ருக்கும் எழிலுடைய தாயெ னச்சொல்
   கவிதைமொழி வாச கத்தின் - உமையாளே!!