'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Dec 15, 2018

நாள்வரும்

(ஒயிற்கும்மி)

பைந்தமிழ்ச்செம்மல் இணுவையூர் வ-க-பரமநாதன்

நல்லவ  ராள்கின்ற  நாடென  மாறிடும்
நாளது வந்திடும் பாருங்க டா
நறும்தேனெனும் தமிழாமது
நயமேமிகு நிலையேயுற
நானிலம் போற்றிட வாழ்ந்திடு மாம்.

வல்லவர் நம்தமி ழர்களா மென்றிடும்
வாழ்வது வந்தினிச் சேர்ந்திடு மாம்
வளமோபெரு கிடவேயதில்
அளவேயிலை யெனவேபுகழ்
வந்தணைத் தாடிட நின்றிடு வோம்

சொன்னதைச் செய்திடும் தோள்வலி கொண்டவர்
சூழ்ந்தெமைக் காத்திடும் நாள்வரு மாம்
தொடுவாரெவர்  தடுப்பாரெவர்
சுடுவாரெவர்  துயரேயிலை
துள்ளிக்கு தித்தங்கு வாழ்ந்திடு வோம்

நன்னெறி தோன்றிடும் நம்மூர்செ ழித்திடும்
நாய்களும் பேய்களும் போயொழி யும்
நடையோதனி எழிலோவுய
ரெனவேதினம் மகிழ்வாடிட
நம்தமிழ் நாடுசி றந்திடு மாம்.

காதல் தேவி நீயே

நிர்மலா சிவராசசிங்கம்
அறுசீர் விருத்தம்

பூக்கள் மலர்ந்த தருணம்
பூவை உன்னைக் கண்டேன்
பாக்கள் வடிக்க நானும்
பாவை நீயும் நாண
ஏக்கம் மனத்தில் பிறக்க
என்னே பார்வை பார்த்தாய்
தூக்கம் கலைந்து போகச்
சுகமாய் நீயும் சிரித்தாய்

உள்ளம் மகிழ்வில் பறக்க
உண்மை மௌனம் பேசத்
துள்ளி வந்தேன் அருகில்
தூரத் தள்ளி நின்றாய்
கள்ள மற்ற பெண்ணே
காதல் வலையில் வீழ்ந்தேன்
அள்ளி அணைக்கத் துடிக்க
அசைந்து சென்றாய் நீயும்

எண்ணம் போன்ற வாழ்வு
எளிதாய்க் கிட்டு மன்றோ
கண்கள் கண்ட கனவில்
காதல் தேவி  நீயே
வண்ணக் கனவு  பலிக்க
மகிழ்வு பொங்கும் மனத்தில்
பெண்மை மகிழ்வு கொள்ள
பெருமைக்  கொடுத்தி டுவேனே

பாரதியால் பெற்ற பயன்

கவிஞர் "இளவல்" ஹரிஹரன், மதுரை

வெடிகுண்டு வார்த்தைகள் வீர்யமிகு பாட்டு
படிக்கின்ற பாமரரும் பார்வை - துடிக்கின்ற
வீர விவேகங்கொள் விந்தை யுணர்வெல்லாம்
பாரதியால் பெற்ற பயன்.

அக்கினிப் பார்வைகள் ஆர்ப்பரிக்கும் பாடல்கள்
சொக்கவைக்கும் சுந்தரச் சொற்கள் - திக்கெட்டும்
வீர சுதந்திரம் வேண்டிட வைத்ததே
பாரதியால் பெற்ற பயன்.

தேச விடுதலைக்குத் தேசுகவி யாத்தபடி
வாச மலரென, வாரணமாய் - ஆசுகவி\
பாரதிரப் பாட்டுரைத்துப் பாரதத்தைப் பெற்றோமப்
பாரதியால் பெற்ற பயன்.

நெஞ்சில் துணிவையும் நேர்மைத் திறத்தையும்
அஞ்சா உணர்வும் அளித்தவன் - துஞ்சுமொரு
வீரத்தை வெற்றியை வீறுகொளப் பாடியதே
பாரதியால் பெற்ற பயன்.

கூட்டாஞ்சோறு!

முனைவர் அர.விவேகானந்தன்

                        சிறார்பாடல்!

கூட்டாஞ்சோறுஆக்கலாம்
வீட்டின் ஓரம் வாருங்கள்

வீட்டில் இருக்கும் அரிசியை
வேலா நீயும் கொண்டு வா!

கயிற்றில் தொங்கும் கறியதை
கலிமா நீயும் பறித்து வா!

மேட்டில் காயும் விறகதை
மேரி நீயும் ஒடித்து வா!

வெறுப்பில்லாமல் கூடுவோம்
விரும்புமுணவை ஆக்குவோம்!

அளவாய் உணவைப் பகிர்ந்திடுவோம
அன்பை அதிலே கலந்திடுவோம்!

கூட்டுறவை வளர்த்திடுவோம்
கூடி உண்டு களித்திடுவோம்!

தமிழ்க்குதிர் - 2049 நளி இதழ்

 

Dec 10, 2018

நட்பின் இலக்கணம்!

நட்பின் இலக்கணம்!


                                            சீதரன் ராகவன்

கவியரசர் கண்ணதாசனின் அருமையான பாடல் வரிகள்...சிம்லா ஸ்பெஷல் திரைப்படத்தில்....
சரண வரிகள் நட்பின் உரைகல்லாக விளங்கும்...

குருவி இனங்கள் . . .அழிவுக்கு என்ன காரணம்?


       குருவி இனங்கள் . . .
   அழிவுக்கு என்ன காரணம்?


                                              கோவை.சதாசிவம்

         திரைக்கலைஞர் ரஜினிகாந்த் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட '2.0' திரைப்படம் வெளியானதிலிருந்து பல முகநூல் நண்பர்கள் அலைப்பேசியில் அழைத்த வண்ணமாக உள்ளார்கள்!

அவன்கண் விடல்

அவன்கண் விடல்

ஜெகதீசன் முத்துக் கிருஷ்ணன் 
" விசாலம்! விசாலம்!! " தன் மனைவியைக் கூப்பிட்டார் பீதாம்பரம்.

" என்னங்க?"

" இன்னிக்கி கரண்ட் பில் கட்டணும்; கடைசி நாள். கோடிவீட்டுக் கோவிந்தசாமி நமக்குப் பணம் தரணும்; அத வாங்கியாரச் சொல்லு."

தங்கச் சங்கிலி

   தங்கச் சங்கிலி      

            மதுரா
பார்வதிக்கு அழுகையும் ஆத்திரமுமாக வந்தது...ஒவ்வொருத்தர் வாழ்வில் எதை எதையோ அனுபவிச்சு சந்தோஷமா இருக்க… கேவலம் ஒரு தங்கசங்கிலிக்குத் தான் துப்பில்லாம போய்விட்டோமே... கழிவிரக்கம் கண்ணீராய்ப் பெருக அம்மன் சன்னதியில் விரக்தியாய் உட்கார்ந்தாள்...
அவளுக்கும் திருமணமாகி இருபத்தைந்து

நடுப்பக்க நயம்

நடுப்பக்க நயம்

  பாவலர் மா.வரதராசன்
       கம்பன் கவிநயம் – 2
    சொக்க வைக்கும் ஒருசொல்
"யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவன்போல் இளங்கோ வைப்போல் யாங்கனுமே பிறந்ததில்லை..."" என்று பாரதி அயர்ந்து போகிறான்.
"எண்ணியெண்ணித் திட்டமிட்டு எழுதி னானோ? எண்ணாமல் எங்கிருந்து கொட்டி னானோ? ",

இற்றைத் திங்கள் இவரைப் பற்றி…

இற்றைத் திங்கள்   இவரைப் பற்றி…     

பைந்தமிழ்ச் செம்மல் வள்ளிமுத்து
                                                                                         
 பேராசிரியை இரா.கஸ்தூரி

தோன்றின் புகழோடு தோன்றுக' என்ற வள்ளுவரின் வைர வரிகளைத் தன் எழுத்தாலும் பேச்சாலும் செயலாலும் செய்து, தமிழ்

வினாதலும் விடுத்தலும்

வினாதலும் விடுத்தலும்


வினா 1
ஐயா வணக்கம்!
விருத்தப் பாக்களில் கனிச்சீர்கள் வரலாமா? எவ்வகைப் பாடல்களில் கனிச்சீர் வரவே கூடாது?

வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ…

       வடசொற் கிளவி   
      வடவெழுத்து ஒரீஇ…


தமிழகழ்வன் சுப்பிரமணி

பகுதி 1

இலக்கியவகையால்சொற்களைநான்குவகையாகப்பிரிப்பர். அவையாவன: இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல். இவற்றைச் செய்யுள் ஈட்டச்சொற்கள்எனத் தொல்காப்பியம் கூறுகிறது.

மலச்சிக்கல்

மலச்சிக்கல்

    பாவலர் மா.வரதராசன்
          மலச்சிக்கல் மனித இனத்தின் பகை. மற்ற உயிர்களெல்லாம் இயற்கை உணவை உண்டு வாழ்வதால் மலச்சிக்கல் ஏற்படுவதில்லை. நோயடைவதுமில்லை. ஆனால் மனிதன் வேக வைத்த செயற்கை உணவுகளை உண்டு மலச்சிக்கலை அடைந்து அதனால் பல நோய்களுக்கும் பலவிதமான இன்னல்களுக்கும் ஆளாகிறான். அதன் விளைவாக மிக விரைவில் தன் வாழ்வின் பயணத்தை முடிக்கிறான்.

மனி த(ன்)ம் உண்டோ...

மனி த(ன்)ம் உண்டோ...


         ஜெனிஅசோக் 
கண்ணிருந்தும் நெஞ்சில் கருணையிலை பார்பரவிப்
பண்ணிருந்தும் பாட மனதிலை - உண்மையிலை!
வண்ணமிலாப் பூக்களென வாழின் பயனிலை.
எண்ணில், மனிதம் இலை .

அவள்

அவள்

பைந்தமிழ்ச் செம்மல் கவினப்பன் 

முன்னர் விழியதட்டி மூச்சிறுக்க மூக்கதட்டிக்
கன்னக் குழியதட்டிக் கால்கொண்டாள் பின்னர்ப்
புரிகுழற் சேக்கையுட் பூவேய்ந்தா ளென்ற
னொருவழி யும்பொய்க்க வோ

வாழவைக்கும் காற்றாய் வாவா

வாழவைக்கும்  காற்றாய்  வாவா


    பாவலர் கருமலைத்தமிழாழன்

எதற்கிந்த  சீற்றமுடன்  வீசு  கின்றாய்
----எல்லாமும்  அழிப்பதற்கா  புயலாய்  வந்தாய்
பதவியிலே  இருப்பவர்கள்  நாட்டை  யின்று
-----பாழ்செய்து  வளம்சுருட்டிக்  கீழே  தள்ள
மதவெறியர்   ஒருபக்கம்   எரித்து  நிற்க

கஜா புயலும் கண்ணீர் மழையும்

கஜா புயலும் 
        கண்ணீர் மழையும் 


         சோலைக் கவிஞர்கள்
            (எழுசீர்ச் சந்த விருத்தம்.)

ஆனை யாற்க ளங்கு டைந்த
   ஆவி யான தஞ்சையின்(று)
ஆனை யாற்க லங்கி நிற்க
    ஆவ  தென்ன செய்கிலோம்
வான ளாவி நின்ற தென்னை

உய்யும் இவ்வுலகம் உன்னுள்நீ மாறிவிடின்!

உய்யும் இவ்வுலகம் 
          உன்னுள்நீ மாறிவிடின்! 

           எசேக்கியல் காளியப்பன் 
                 கலிவிருத்தம்

ஏழை எனநினையான் எல்லோர்க்கும் ஊணளிப்பான்
கோழை மனமின்றி கொண்டதுயர் தாங்கிடுவான்
வாழை அழிந்து,தான் வாழுமிடம் கெட்டாலும்
தோளை உயர்த்தித் துடிப்புடனே ஏர்பிடிப்பான்-

கஜா புயல் சேதம்

கஜா புயல் சேதம்


    கவிக்கோ துரைவசந்தராசன்

நெடுமரத்தின் வேர்முனையால் பல்து லக்கி
நீர்காற்று கைகோர்த்து நிலம்து வைக்க
நடுவீட்டில் குடிபுகுந்து நச்ச ரிக்க
நடுவானம் கீழிறங்கி விழுந்தி ருக்க

ஐராவதம் மகாதேவன் அவர்கட்கு இரங்கற்பா!

ஐயா ஐராவதம் மகாதேவன் அவர்கட்கு 
                 இரங்கற்பா!
    (14 அடி இன்னிசைக் கலிவெண்பா)
     இராஜ்குமார் ஜெயபால்

இந்தியா எங்கும் இயற்றமிழ் ஆண்டதை
சிந்து சமவெளிச் சிக்கலைத் தீர்த்துவைத்து
முந்தையர் காணாத முத்தான வித்தினை

எல்லோரும் வெல்வோம்

எல்லோரும் வெல்வோம்
           

   ஜோதிபாஸ் முனியப்பன்

முயற்சியொன்றே மூலதன மாகக் கொண்டு
--- முடிந்தவரை போராடு வெற்றிக் காண ..!
பயிற்சிகளை முறைப்படியாய் பெற்று நீயும்
---- பாடுபடு வெற்றியென்றும் உன்னைச் சேரும்...!
அயராம லுழைத்தாலே அல்லும் பகலும்

குறித்தபடி தொடுத்த பாடல்கள்

குறித்தபடி தொடுத்த பாடல்கள்


  சென்ற இதழில் கொடுத்த அடியின்
            பாடல் வகை :
          கட்டளைக் கலித்துறை 

உள்ளம் பெருங்கோயி லூனுடம் பேபெரு வாலயமாம்!
கள்ள மனங்கொளின்  காலங் கனிந்து கணக்கிடுமாம்!
வெள்ளை யிருப்பை விருப்புட

மொழி காக்க...இனம் காக்க..!

மொழி காக்க...இனம் காக்க..!


பாவலர் சொ.சொல்லினியன் சேகர்


மொழிவாழ  இனம்வாழ   மூத்தோர்  சொன்ன
முத்தான  கருத்துக்கள்   மறைந்தா  போகும்  ?
அழியாமல்   மொழியினத்துக் 

விழிதிற ! எழு ! நட!

விழிதிற  ! எழு  ! நட!


வங்கனூர்  அ.  மோகனன் .

 (நேரிசை ஆசிரியப்பா)

தமிழக இளைஞனே !தாள்திறந் தேவா !
உமியினும் இழிவாய் உனைமதிக் கின்றார்!

வெளியில் வாடா! விழிதிற! ஏழு! நட!
ஒளியிலை இருட்பகை உண்மை உணர்வாய்!

பாவை முப்பஃது

பாவை முப்பஃது       

           (முதல் தொகுதி)

பைந்தமிழ்ச் செம்மல் 
மன்னை வெங்கடேசன்

காப்பு
திருப்பாவை என்னுமொரு தீந்தமிழ்த் தேன்மேல்
கருப்பெனவே அந்தாதி காண - விருப்புற்றேன்
செந்தமிழே இம்மாலை சீருறவே நீயிங்கு
வந்தருள வேண்டுவன் வா

வையத் தலைமை கொள்

வையத் தலைமை கொள்


 
                               ஞானமூர்த்தி சீனிவாசன்.

                       இன்னிசை வெண்பா'க்கள்
வைய முதல்தலைமை தையல்கள் தானெனினும்
வையத் தலைமைகொள்ள  வாமகனே என்றேதான்
வாயில் அமுதூற வாழ்த்தியெதிர் பார்த்திருப்பாள்
வாயும் வயிறுமாய் மாது.

திருக்கண்டியூர் திருப்பதிகம்

திருக்கண்டியூர் திருப்பதிகம்


-          கவிஞர் குருநாதன் ரமணி

                                    காப்பு
கொடிமரப் பிள்ளையார் கோவிலுள் ளேழு
வடிவுடைப் பிள்ளையார் வாழ்த்தி - அடியேன்
பிரம்மசிரக் கண்டீசர் பெம்மான் புகழ்சொல்
ஒருபதிகம் செய்யும் உவப்பு.