'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Dec 10, 2018

உய்யும் இவ்வுலகம் உன்னுள்நீ மாறிவிடின்!

உய்யும் இவ்வுலகம் 
          உன்னுள்நீ மாறிவிடின்! 

           எசேக்கியல் காளியப்பன் 
                 கலிவிருத்தம்

ஏழை எனநினையான் எல்லோர்க்கும் ஊணளிப்பான்
கோழை மனமின்றி கொண்டதுயர் தாங்கிடுவான்
வாழை அழிந்து,தான் வாழுமிடம் கெட்டாலும்
தோளை உயர்த்தித் துடிப்புடனே ஏர்பிடிப்பான்-


நாளை உணவுக்கு நானிருப்பேன் என்றுழைப்பான்
வேளை தவறாமல் விளைபொருளைக் காத்திருப்பான்
கூழுக் கழுகின்ற கூட்டமாய் இன்றிருப்பான்!
ஏழைக் கிரங்கா இறைவனும் கெட்டானோ?-

துட்டுக் கலைவார் துரைத்தனத்தில் மூழ்கினனோ?
மட்டுக் கடைகளிலே மதிமயங்கிச் சாய்ந்தனனோ?
பிட்டுக் குழைத்தேற்ற பிரம்படியும் மறந்ததுவோ?
கொட்டிக் கெடுப்பவனைக் கும்பிட்டுப் பாடிடிடவோ?

பெய்த மழையில் பிழைசெய்வார் ஆட்சிகளும்
நெய்தல் நிலத்துப்பாய் நீர்த்திடவும் கூடாதோ?
தெய்வமே! நீயும் திருந்திவர மாட்டாயோ?!
உய்யுமே இவ்வுலகம் உன்னுள்நீ மாறிவிடின்!

No comments:

Post a Comment