இற்றைத் திங்கள் இவரைப் பற்றி…
பைந்தமிழ்ச் செம்மல் வள்ளிமுத்துபேராசிரியை இரா.கஸ்தூரி
தோன்றின் புகழோடு தோன்றுக' என்ற வள்ளுவரின் வைர வரிகளைத் தன் எழுத்தாலும் பேச்சாலும் செயலாலும் செய்து, தமிழ்
இலக்கியப்ணிகளில் தன்னிகரற்ற சிகரமென வாழ்ந்து கொண்டிருக்கும் சிந்தனைப் பெண்மணி பேராசிரியை இரா.கஸ்தூரி அவர்கள் இம்மாத நடுப்பக்க நாயகர் பக்கத்தை அலங்கரிக்கின்றார்..
சென்னையில் பிறந்து பல்வேறு பட்டங்கள் பெற்றுப் பள்ளியாசிரியராகவும் கல்லூரிப் பேராசிரியராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கும் முனைவர்.கஸ்தூரி அம்மையார் அவர்கள் தமிழை வைத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் பல்வேறு பேராசிரியர்களுக்கு மத்தியில் தமிழுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் ஓராசிரியராகத் திகழ்கின்றார்.
தொலைக்காட்சி நேர்காணல், வானொலி உரையாடல், அயல்தேச நாடுகளின் கருத்தரங்குகள் என்று பம்பரமாகச் சுழலும் கஸ்தூரி அமையார் அவர்கள் கவிஞராக, எழுத்தாளராக, ஆய்வியல் அறிஞராக, சிறுகதை ஆசிரியராக, நவீனம் சார்ந்த படைப்பாளராகப், பேச்சாளராக இவர் தொட்டுத்துலங்ககாத துறைகளே இல்லையென்று சொல்லும்படி அத்தனை துறைகளிலும் மின்னும், பல்துறை வித்தகராகப் பவனி வருபவர்.
வள்ளுவரின் கோட்பாடுகளை யாவருக்கும் கொண்டு செல்லும் படி எண்ணற்ற கட்டுரைகளைப் படைத்தவர்,
கருத்தரங்குகளில் தன் சிந்தனைமிகு பேச்சால் அதனைக் கொண்டுசேர்க்க அயராது பாடுபடுவர்.
உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் கருத்தரங்குகளில் இவர் படைத்தளித்த பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளில்
திருக்குறளும் சைவ சிந்ததாந்தமும்,
திருக்குரானும் திருக்குறளும்,
திருக்குறளும் தென்னாட்டுக் காந்தியும்,
வள்ளுவரும் வான்மறையும்
போன்றன குறிப்பிடத்தக்கன
படைப்புகள் :
அன்றும் இன்றும்,
கஸ்தூரி ராசாவின் கவிதைகள்,
முக்கனி,
திருக்குறள்காட்டும் வாழ்வியல் நெறிகள்
கஸ்தூரி ராசாவின் சிறுகதைகள்
,இலக்கியமலர்கள்
வேரும் விழுதுகளும்,
தமிழும் தமிழரும்,
வள்ளுவரும் வான்மறையும்,
திருக்குறளும் திருவருட்பாவும்,
திருக்குறளில் பெண்ணுரிமை,
திருக்குறளில் சைவசித்தாந்தம்,
பொதுநோக்கில் திருக்குறள்
... என அவர் படைப்புகள் நீளும்..
விருதுகள் :
எண்ணற்ற விருதுகளுக்குச் சொந்தக்காரரான அம்மையாரின் அனைத்து விருதுகளையும் பட்டியலிட்டால் பக்கம் நீளும் என்பதால்...
மதுரை பன்னாட்டுத் தமிழுறவு வெள்ளிவிழாவில் பெற்ற ,தமிழ்பணி செம்மல்' விருதையும் , வாணுவம்பேட்டை திருக்குறள் இலக்கிய மன்றம் வழங்கிய திருக்குறள் மாமணி விருதையும் ஈங்கு சுட்டிக் காட்டுகிறோம்
முகவரி :
முனைவர். கஸ்தூரி ராஜா
286 புரசைவாக்கம் நெடுஞ்சாலை
65-2-வது அடுக்கு, பையாவளாகம்
சென்னை 600 007
அம்மாவின் தமிழ்ப்பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதில் தமிழ்க்குதிர் மட்டற்ற மகிழ்சி கொள்கிறது
No comments:
Post a Comment