'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Dec 15, 2018

கூட்டாஞ்சோறு!

முனைவர் அர.விவேகானந்தன்

                        சிறார்பாடல்!

கூட்டாஞ்சோறுஆக்கலாம்
வீட்டின் ஓரம் வாருங்கள்

வீட்டில் இருக்கும் அரிசியை
வேலா நீயும் கொண்டு வா!

கயிற்றில் தொங்கும் கறியதை
கலிமா நீயும் பறித்து வா!

மேட்டில் காயும் விறகதை
மேரி நீயும் ஒடித்து வா!

வெறுப்பில்லாமல் கூடுவோம்
விரும்புமுணவை ஆக்குவோம்!

அளவாய் உணவைப் பகிர்ந்திடுவோம
அன்பை அதிலே கலந்திடுவோம்!

கூட்டுறவை வளர்த்திடுவோம்
கூடி உண்டு களித்திடுவோம்!

No comments:

Post a Comment