'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Dec 10, 2018

தங்கச் சங்கிலி

   தங்கச் சங்கிலி      

            மதுரா
பார்வதிக்கு அழுகையும் ஆத்திரமுமாக வந்தது...ஒவ்வொருத்தர் வாழ்வில் எதை எதையோ அனுபவிச்சு சந்தோஷமா இருக்க… கேவலம் ஒரு தங்கசங்கிலிக்குத் தான் துப்பில்லாம போய்விட்டோமே... கழிவிரக்கம் கண்ணீராய்ப் பெருக அம்மன் சன்னதியில் விரக்தியாய் உட்கார்ந்தாள்...
அவளுக்கும் திருமணமாகி இருபத்தைந்து
வருஷமாச்சு..கட்டிய கணவர் சுந்தரேசனுக்கு கூடப்பிறந்த தங்கை இரண்டு பேர் தம்பி ஒருத்தர்...நோயில் கிடக்கும் அம்மா...
பார்வதி போட்டுக்கொண்டு வந்த பத்து பவுனும் ஒவ்வொருத்தர் படிப்பு கல்யாணம் னு அடகுக்கடைக்குப் போய் வந்தது.. எல்லாம் முடிந்து மூச்சுவிடும் போது ஒரே பிள்ளைக்கும் உதவியது...
கடைசியில் வேலையில் சேர்ந்துவிட்ட பிறகு அம்மாவுக்கு ஆசையாய் மகன் வாங்கிவந்த சங்கிலி...இனி கழுத்து புண்ணாகிற கவலை இல்லை என்ற மகிழ்ச்சியில் விழுந்தது மண்.. சுந்தரேசனின் தங்கைக்கு ஹார்ட் ஆபரேஷனாம்.. மாப்பிள்ளை கையை பிசைய சங்கிலி அடகுக்கு மீண்டும்..
நேரம் போனதே தெரியாமல் கோவிலில் உட்கார்ந்தவள்
மெல்ல மனதைத் தேற்றிக் கொண்டவளாய் வீட்டுக்குத் திரும்ப ஆயத்தமானாள்..
கோவிலை விட்டு வெளியேற சட்டென ஒரு கை அவளைப் பிடித்திழுக்கக் கண்மூடித் திறப்பதற்குள் கழுத்திலிருந்த கவரிங் செயினைப் பறித்துக் கொண்டு பறந்தான் திருடன்..
திகைத்துப் போனாள் பார்வதி.. நல்லகாலம் பிள்ளை காசு பிழைச்சுதே...
இப்போதெல்லாம் தங்கச் சங்கிலியை நினைத்தே பார்ப்பதில்லை பார்வதி...

No comments:

Post a Comment