'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Dec 10, 2018

மலச்சிக்கல்

மலச்சிக்கல்

    பாவலர் மா.வரதராசன்
          மலச்சிக்கல் மனித இனத்தின் பகை. மற்ற உயிர்களெல்லாம் இயற்கை உணவை உண்டு வாழ்வதால் மலச்சிக்கல் ஏற்படுவதில்லை. நோயடைவதுமில்லை. ஆனால் மனிதன் வேக வைத்த செயற்கை உணவுகளை உண்டு மலச்சிக்கலை அடைந்து அதனால் பல நோய்களுக்கும் பலவிதமான இன்னல்களுக்கும் ஆளாகிறான். அதன் விளைவாக மிக விரைவில் தன் வாழ்வின் பயணத்தை முடிக்கிறான்.


   மலச்சிக்கலே நோய்கள் அனைத்திற்கும் அடிப்படையாகும். நாம் ஏதாவது நோயின் காரணமாக மருத்துவமனை சென்றால் மருத்துவர் முதலில் கேட்கும் கேள்வியே மலம் நன்றாக போனதா? என்பதுதான். எனவே மலச்சிக்கலைத் தீர்த்து வாழ்வதே நோயில்லா வாழ்விற்கு ஆதாரமாகும்.

   கற்றறிந்த அறிஞர்கள் கூட மலச்சிக்கலை அறியாமலும் அறிந்தாலும் அதை அதற்கான காரணம் தெரியாததால் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.

  மலச்சிக்கல் மனத்தைக் கெடுக்கும்...பாவத்தை உண்டாக்கும். வயிற்றில் மலம்;;: மனத்தில் மலம் என்பது பழமொழி. மலச்சிக்கல் உள்ளவர்கள் கெட்ட எண்ணங்கள் உள்ளவர்களாக இருப்பார்கள். சூழ்நிலைகளாலும், அறிவினாலும் அவர்கள் நல்லவர்களாக நடந்து கொள்ளலாம். ஆனால் அவர் மனம் கெட்ட எண்ணங்களைத் தம்முள் மறைத்து வைத்துக் கொண்டுதானிருக்கும்.

       மலச்சிக்கலைக் கண்டறிதல்
 1. காலையில் எழுந்தவுடன் கால்மணி நேரத்துக்குள் மலம் போய்விட வேண்டும். அப்படி இல்லாமல் அடிக்கடி மலம் கழித்தால் மலச்சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று பொருள்.

  2.பத்து நிமிடங்குளுக்கு மேல் மலம் கழித்தலும் மலச்சிக்கலின் அறிகுறியே!

  3. பசை போல மலங்கழித்தலும் மலச்சிக்கலின் அறிகுறியே!

    இவை ஏதும் இல்லாமல் அதாவது,
  காலை எழுந்தவுடன் மலங்கழித்தல், ஐந்து நிமிடத்திற்குள் கழித்தல், ஒரே முறையிலேயே வெளியேற்றி விடுதல், பசையற்றுக் கழிதல் ஆகியவை மலச்சிக்கல் இல்லாத நிலையாகும்.


   மலச்சிக்கலைத் தீர்ப்பதற்கு முன்பு மலத்துவாரத்தை உள்ளும் புறமும் தூய்மை படுத்த வேண்டும். இதற்குச் சித்தர்கள் கூறும் முறை: சிற்றாமணக்கு எண்ணையை (விளக்கெண்ணெய்) கற்றாழைச் சோறுடன் கலந்து பதமாகக் காய்ச்சி வைத்துக் கொண்டு ஆள்காட்டி விரலால் தொட்டு மலத்துவாரத்தில் விட்டு இரண்டு சுற்று சுற்ற வேண்டும். இது அருவெறுக்கத் தக்கதல்ல. மாறாக நரக வேதனையைத் தீர்க்கும் மருந்தாகும்.

   மலங்கழித்துக் கழுவியபின் காய்ந்த மலம் உட்புறம் ஒட்டிக் கொண்டிருக்கும். மேற்சொன்ன முறையில் ஒட்;டிக் கொண்டிருக்கும் மலத்தை நீக்கி விடலாம். இதனால் நோய். அரிப்பு முதலியன வராது.
வள்ளுவரும்இ
     புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூமை
     வாய்மையாற் காணப் படும்.     - என்கிறார்.
   புறந்தூய்மை என்பது உடலின் உள்ளும் புறமும் தூய்மை செய்வதைக் குறிக்கிறது. அகத்தூய்மை என்பது அது உட்புறம் என்ற பொருளை மட்டும் தருவதில்லை. தூய எண்ணம் என்ற பொருளையும் தருகிறது.

   எனவே புறந்தூய்மை என்பது உள்ளும் புறமும் தூய்மை செய்வதைக் குறிக்கிறது. வெளியில் குளிப்பதாலும், கழுவுவதாலும் தூய்மை செய்கிறது. உள்ளே எவ்வாறு தூய்மையாகும்? நீரைக் குடிப்பதால்...அதாவது உணவுண்ட பின்னும் தாகத்திற்காகவும் மட்டுமல்லாமல் இரவில் படுக்கப் போகும் போது அரைலிட்டர் தண்ணீரும், காலை எழுந்தவுடன் அரைலிட்டர் தண்ணீரும் குடித்தால் உள்ளே தூய்மையாகும். உமிழ்நீருடன் சேர்ந்து உள்ளே சென்று குடலைச் சுத்தம் செய்யும். மலச்சிக்கலை நீக்கும். இரத்தத்தை நீர்மமாக்கும், அதிகமாக்கும்.

   மருத்துவ நூல்கள் மலச்சிக்கலை மந்தம்|| என்று குறிப்பிடுகின்றன.
 மந்தத்தால் வாயுவாம் மிகுந்தநல் வாயுவால்
  விளைந்திடும் நோயெல்லாம்|| என்று கூறும் சித்தர் பாடல்
      காணுமே மந்தம் கவளிக்கும் அன்னத்தால்
       காணுமே மந்தம் கடும்மா மிசம்மீறில்
       காணுமே மந்தம் கலந்தமாப் பண்டத்தால்
       காணுமே மந்தம் கடும்மேதிப் பாலுக்கே|| என்று
   அது எதனால் ஏற்படுகிறது என்பதையும் கூறுகிறது.  மெல்லாமல் விழுங்கும் உணவினாலும், மாமிச உணவினாலும், மாவினால் செய்த இட்லி, தோசை போன்ற பண்டங்களாலும், எருமைப் பாலினாலும் மந்தம் ஏற்படும் என்று கூறுகிறது.
   மலச்சிக்கலைத் தீர்க்காமல் நோய்களுக்கு மருந்து கொடுத்தால் அது வேலை செய்வதில்லை. எனவேதான் இனிமா|| கொடுத்தபின் சிகிச்சை செய்யும் முறை இன்றும் உள்ளது.

   மலச்சிக்கலை ஒழிக்க எந்தச்சுவை அதிகரித்திருக்கிறது, எந்தச்சுவை குறைந்திருக்கிறது என்று கண்டறிந்து அதற்கேற்ப உணவை மாற்றிக் கொள்வதும், அதிகாலையில் எழுதல், உடற்பயிற்சி செய்தல், காலையில் எழுந்தபின்னும், இரவு படுக்கும் போதும் தண்ணீர் குடித்தல், இடுப்புக் குளியல் போன்றவற்றால் மலச்சிக்கலை ஒழிக்கலாம்.

   உணவுகளை மலச்சிக்கல் செய்யும் உணவுகள், மலச்சிக்கல் செய்யாத உணவுகள் என்ற இருவகைகளில் அடக்கலாம். புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, இனிப்பு ஆகியன மலச்சிக்கல் செய்யும் உணவுகளாகும். உப்பு, காரம் இவை உப்புணவுகள் அதாவது மலச்சிக்கல் செய்யாத உணவுகள் எனப்படும்.

   புளிப்பு உணவினால் நோய் கண்டால் அதற்கு தீர்வு உப்பு உணவுகள். உப்பு உணவினால் நோய்கண்டால் அதற்குத் தீர்வு புளிப்பு உணவுகள். சுருக்கமாக சொன்னால் ஷஷபுளிப்பு மிஞ்சினால் உப்பு...உப்பு மிஞ்சினால் புளிப்பு|| என்க.

மலச்சிக்கலோடு ஏதாவது நோயும் உடையவர்கள் நாடி பார்த்து எந்தச் சுவை குறைந்துள்ளதோ அந்தச் சுவையில் மலச்சிக்கல் செய்யாத பண்டங்களை உண்டால் போதும்.         
   புளிப்பு மலச்சிக்கல் செய்யும் என்றபோதும் புளிப்புக் குறைந்தவர்களுக்கு அந்தப் புளிப்பே மலச்சிக்கலைத் தீர்க்கும்.
   துவர்ப்புக் குறைந்தவர்களுக்குத் துவர்ப்பே மலச்சிக்கலைத் தீர்க்கும்;. அவர்கள் அத்திக்காய், அல்லது கடுக்காய் எந்த விதத்திலாவது சேர்த்துண்டால் போதும்.
 உப்புக் குறைந்தவர்கள் உப்புணவைக் கொள்ள வேண்டும். சுரம், சலுப்பு இருந்தால் உப்புணவு அந்நோயை அதிகப்படுத்தும். எனவே அப்போது உப்புப் பண்டங்களைக் கொள்ளாமல் தனி உப்பாகப் பயன்படுத்தலாம்.

   இனிப்புக் குறைந்தவர்கள் இனிப்போடு புளிப்பும் உண்ண வேண்டும். ஏனெனில் இவர்களுக்குப் புளிப்பும் குறைந்திருக்கும். இச்சுவைகளை நன்றாக உண்டுவிட்டு எட்டுமணி நேரம் தூங்க வேண்டும். இது எளிதாகத் தோன்றினாலும் கடினமானதாகும்.  இவர்கள் பீடி, சிகரெட், டீ, காபி இவற்றைத் நீக்க வேண்டும்.
   இதுகாறும் கூறியவற்றால் மலச்சிக்கல்தான் நோய்களின் மூலம் என்றறிந்து அதை வராமல் செய்யவும், வந்தபின் என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் இந்தப் பகுதியில் அறிந்து பின்பற்றுக! நோயில்லாமல் வாழ்க!!

No comments:

Post a Comment