'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Dec 10, 2018

நட்பின் இலக்கணம்!

நட்பின் இலக்கணம்!


                                            சீதரன் ராகவன்

கவியரசர் கண்ணதாசனின் அருமையான பாடல் வரிகள்...சிம்லா ஸ்பெஷல் திரைப்படத்தில்....
சரண வரிகள் நட்பின் உரைகல்லாக விளங்கும்...


"யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு
யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு
பூவென்று முல்லைக் கன்டு புரியாமல் நின்றேன் இன்று
பால் போலக் கல்லும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
பால் போலக் கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
நான் என்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா"

நட்பு கொண்டு ஏமாந்த நாயகனின் வார்த்தைகள்.

நட்பின் உண்மைத்தன்மை விளக்கும்.. இந்த பழந்தமிழ்ப் பாடல்..

நாலடியார்:

"இலங்குநீர்த் தண்சேர்ப்ப! இன்னா செயினும்
கலந்து பழிகாணார் சான்றோர்; - கலந்தபின்
தீமை எடுத்துரைக்கும் திண்ணறி வில்லாதார்
தாமும் அவரின் கடை."

விளக்கம்:

நண்பர்களின் குற்றத்தைத் தட்டிக்கேட்கும் குணம் நல்ல நட்பின் அடையாளம் என விளக்கும் நாலடியார் கூறும் கருத்து இது. நீர்மிக்க குளிர்ந்த கடற்கரையையுடைய நாட்டின் அரசனே! நண்பர் தீயனவற்றைச் செய்தாலும், சான்றோர், அவர் செய்த பிழையை மனத்தில் கொள்ளார். நட்புச் செய்தபின் அவர் குற்றத்தை எடுத்துரைக்கும் திடமான அறிவில்லாதவர் தீமை செய்யும் நண்பரைவிடத் தாழ்ந்தவராவர்.

நட்பாவது, கெட்ட வழியில் நண்பன் செல்வதை நீக்கி, நல்வழியில் செலுத்தி, துன்பம் வந்தவிடத்து உடனிருந்து அனுபவிப்பதேயாகும்.

நட்பின் நல்லிலக்கணம் நாள்தோறும் போற்றுவோம்!

No comments:

Post a Comment