'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Dec 10, 2018

ஐராவதம் மகாதேவன் அவர்கட்கு இரங்கற்பா!

ஐயா ஐராவதம் மகாதேவன் அவர்கட்கு 
                 இரங்கற்பா!
    (14 அடி இன்னிசைக் கலிவெண்பா)
     இராஜ்குமார் ஜெயபால்

இந்தியா எங்கும் இயற்றமிழ் ஆண்டதை
சிந்து சமவெளிச் சிக்கலைத் தீர்த்துவைத்து
முந்தையர் காணாத முத்தான வித்தினை

வந்தவர் யாவரும் வாழ்த்த விதைத்தீர்;

பழம்பிரம்மி கண்டு படித்துநீர் சொன்னீர்;
அழகெழுத்தைக் கற்கவோர் நல்வழி செய்து
குழைத்தபல் மட்கலன் கூறும் மொழியென்
றழைத்துவந்தீர் பாரறியா நற்றமிழ்ச் சொற்களை;

பல்லாண்டு செய்தவும் ஆய்வால் பிராமியும்
பொல்லா அழிவிற்குப் போகாது மீண்டது
இல்லாத முன்னோரின் இன்சொல் படித்தநீர்
இல்லை இனியெனில் இவ்வுளம் தாங்குமோ

அல்லல்கள் இல்லாத அவ்வுலகில் வாழ்ந்துகொண்டே
நல்வழி காட்டும் எமக்கு!

No comments:

Post a Comment