கவிஞர்
"இளவல்" ஹரிஹரன், மதுரை
வெடிகுண்டு
வார்த்தைகள் வீர்யமிகு பாட்டு
படிக்கின்ற
பாமரரும் பார்வை - துடிக்கின்ற
வீர
விவேகங்கொள் விந்தை யுணர்வெல்லாம்
பாரதியால்
பெற்ற பயன்.
அக்கினிப்
பார்வைகள் ஆர்ப்பரிக்கும் பாடல்கள்
சொக்கவைக்கும்
சுந்தரச் சொற்கள் - திக்கெட்டும்
வீர
சுதந்திரம் வேண்டிட வைத்ததே
பாரதியால்
பெற்ற பயன்.
தேச
விடுதலைக்குத் தேசுகவி யாத்தபடி
வாச
மலரென, வாரணமாய் - ஆசுகவி\
பாரதிரப்
பாட்டுரைத்துப் பாரதத்தைப் பெற்றோமப்
பாரதியால்
பெற்ற பயன்.
நெஞ்சில்
துணிவையும் நேர்மைத் திறத்தையும்
அஞ்சா
உணர்வும் அளித்தவன் - துஞ்சுமொரு
வீரத்தை
வெற்றியை வீறுகொளப் பாடியதே
பாரதியால்
பெற்ற பயன்.
No comments:
Post a Comment