'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்
Showing posts with label குறுக்கெழுத்துப் போட்டி. Show all posts
Showing posts with label குறுக்கெழுத்துப் போட்டி. Show all posts

Jul 13, 2020

குறுக்கெழுத்துப் போட்டி – 2


அன்பான கவிஞர்களே!

இதோ உங்களுக்காக ஓர் இலக்கணக் குறுக்கெழுத்துப் போட்டி. தங்கள் விடையை 31.07.2020க்குள் tamilkudhir@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். சரியான விடை எழுதியவர்கள் பெயருடன் விடை அடுத்த இதழில் வெளியாகும்.


இடமிருந்து வலம்

1. நல்லனவாகிய நீதிகளின் தொகை. அதிவீரராம பாண்டியர் இயற்றியது. (5)
3. போரில் தலைவனை இழந்து, செயலற்று நிற்கும் நிலை (5)
4. இலக்கியப் பகுப்பின் பொதுப்பெயர். ஒழுக்கம் என்பதும் அதுவே. (2)
5. ஒருவகை இசைக்கருவி (2)
6. ‘ஆடுக செங்கீரை’ எனக் குறிக்கப்பெறும் பருவம் இந்தப் பறவையால் பெயர் பெற்றது (2)
7. மண் சுமந்தான் மகேசன். எதற்காக? (3)
8. இதன் சுவையோ விடேன் விடேன் என்றது. (2)
9. கலந்தருநன் (4)
11. தொடர்நிலைச் செய்யுளில் பெரும்பிரிவு.  (4)
12. ........யார் மனை அகல் (3)
13.பாலறி சொல். அளபெடுத்தது. (3)
14. குறைந்த அடிகளைக் கொண்ட அகப்பாடல்களின் தொகுப்பு (5)

மேலிருந்து கீழ்

1. நெடுநல்வாடை தந்தவன் (5)
2. ஒல்காப் பெரும்புகழுடைய நூல். (7)
3. ஒருதலைக் காதல் (4)
4. ஒரு மரம். ஓர் ஊர். ஓர் இடைச்சொல் (3)
5. காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவர்கள் (5)
8. வலிமை. வேறு சொல் (3)
9. மேற்கு. வேறு சொல் (4)
10. பல்லக்கு. வேறு சொல் (3)
11.சோலைகள் பல விரித்து வளம் பரப்புவது (3)
13. எண்ணாகும் வழி (2)

Jun 14, 2020

குறுக்கெழுத்துப் போட்டி – 1 விடைகள்

குறுக்காக

1             கூழை மோனை
2             இணைமுரண்
4             முற்று
5             தளை
6             பண்
10            எழு
11            கண்
12            காவடி
13            செப்பலோசை
14            அளவடி 

நெடுக்காக
1             கூவிளங்காய்
2             இயற்சீர்
3             எதுகை
5             தண்
7             கழி நெடிலடி
8             அகவலோசை
9             காரிகை
10            எண்

விடை எழுதியோர்:
1.       பொன் இனியன் , பட்டாபிராம்
2.       கிருஷ்ண திலகா, போரூர். சென்னை

விடை எழுதிய இருவருக்கும் வாழ்த்துகள்.

May 16, 2020

குறுக்கெழுத்துப் போட்டி


ஆக்கம்: பைந்தமிழ்ச்சுடர்
நடராஜன் பாலசுப்பிரமணியன்

அன்பான கவிஞர்களே! இதோ உங்களுக்காக ஓர் இலக்கணக் குறுக்கெழுத்துப் போட்டி. இது யாப்பிலக்கணத்தை மையமாக வைத்து அமைக்கப்பட்ட குறுக்கெழுத்துப் போட்டி.  தங்கள் விடையை 31.05.2020க்குள் tamilkudhir@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். சரியான விடை எழுதியவர்கள் பெயருடன் விடை அடுத்த இதழில் வெளியாகும்.


குறுக்காக:
1. ஓர் அடியன் 1, 2, 3 சீர்களின் முதல் எழுத்து ஒன்றி வருதல்
2. ஓர் அடியின் முதலிரு சீர்களும் முரண்பட இணைந்து வருந்தொடை
4. ஓர் அடியின் அனைத்துச் சீர்களின் முதலெழுத்து ஒன்றி வருதல் _____ மோனை
5. சீர்கள் ஒன்றுடனொன்று இயைந்து கட்டுப்பட்டு நிற்பது
6. பாடல் - வேறு சொல்                                                  
10. குறள் வெண்பாக்கள் என்று அறியப்படுபவை  ________ சீர் வெண்பாக்கள்
11. முக உறுப்பு. வேற்றுமை உருபு                              
12. ஒரு வகை சிந்துப்பா                                                
13. வெண்பா ஓசை                                                        
14. 4 சீர்கள் கொண்டால்  ______________
                             
நெடுக்காக:
1. நேர் நிரை நேர்                                                           
2. ஈரசைச் சீர்                                                                 
3. இரு சீர்களின் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது
5. நான்கசைச் சீர்களின் மூன்றாமசை நேர் என்பதைக் குறிக்கும் சொல்
7. 6, 7, 8 சீர்கள் கொண்டவை ____________________ எனப்படும்
8. ஆசிரியப்பா ஓசை                                                    
9. கட்டளைக் கலித்துறை                                              
10. எழுத்தை _______ணி யாப்பது கட்டளை கலித்துறை