எல்லோரும் வெல்வோம்
ஜோதிபாஸ் முனியப்பன்முயற்சியொன்றே மூலதன மாகக் கொண்டு
--- முடிந்தவரை போராடு வெற்றிக் காண ..!
பயிற்சிகளை முறைப்படியாய் பெற்று நீயும்
---- பாடுபடு வெற்றியென்றும் உன்னைச் சேரும்...!
அயராம லுழைத்தாலே அல்லும் பகலும்
---- ஆண்டவனும் எப்போதும் துணையி ருப்பான்
துயரங்கள் ஓடிடநாம் துரத்திச் செல்வோம்
---- துணிவாக பயணித்து நாளும் வெல்வோம்...!
ஒற்றுமையாய் செயல்படுவாய் கரம்நீ பற்றி
---- ஓயாமல் நீநடந்தால் உறுதி வெற்றி...!
பற்றோடும் பணிவோடும் இலக்கைத் தொடுவோம்
---- பாங்குடனே உழைத்துநாமும் வெற்றிக் கொள்வோம்...!
சிற்றெண்ணம் கொள்ளாமல் சிறப்பாய் வாழச்
---- சீரான முயற்சியினைக் கொள்வோம். வாழ்வில்...!
வற்றாத வளமெல்லாம் வாய்க்கப் பெற்று
---- வாழ்வினிலே எல்லோரும் வெல்வோம் வாரீர்.
No comments:
Post a Comment