'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Dec 10, 2018

குறித்தபடி தொடுத்த பாடல்கள்

குறித்தபடி தொடுத்த பாடல்கள்


  சென்ற இதழில் கொடுத்த அடியின்
            பாடல் வகை :
          கட்டளைக் கலித்துறை 

உள்ளம் பெருங்கோயி லூனுடம் பேபெரு வாலயமாம்!
கள்ள மனங்கொளின்  காலங் கனிந்து கணக்கிடுமாம்!
வெள்ளை யிருப்பை விருப்புட
னேற்று  வினைகளையின்
பிள்ளை  யுளத்துள் பெருமையா மின்பம் பெருகிடுமே!
அர.விவேகானந்தன்

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பேபெரு வாலயமாம்
கள்ளம் மிகுந்தேநாம் காரிய மேசெயின் காட்டாற்று
வெள்ளம் வருதல்போல் வீண்பழி யேவர நேரிடுமாம்
தெள்ளு மனங்கொண்டே தேசுடை
பண்பொடு வாழந்திடலாம்!
பொன்.பசுபதி

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பேபெரு வாலயமாம்
கள்ளம் வரும்வாயில் காணுதற் கேதடை காரணியாம்
வள்ளல்  தருங்காட்சி வாயிலி லேவரு வாக்கினிலாம்
வெள்ளம் புகுந்தாலும் வீடுகொள் ளேலென வேகுதுவே !
- சோமு . சக்தி

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பேபெரு வாலயமாம்
கள்ள வுளத்தாரே கானலை நீரெனக் கண்டலைவார்
அள்ளக் குறையாத ஆனந்தத் தேனமு துள்ளுறுங்கால்
உள்ளம் முழுதாகும் உள்ளொளி தோன்றிடத் தானவனாம்!
சி.உமாபாலன்

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பேபெரு வாலயமாம்
வள்ளல் பிரானார்க்கு வாய்பெருங் கோபுர வாசலாகும்
கள்ளப் புலனைந்தும் காரிருள் போக்கும் மணிவிளக்கு
தெள்ளத் தெரிந்தார்க்குச் சீவன் அதுவும் சிவலிங்கமே
நெடுவை இரவீந்திரன்

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பேபெரு வாலயமாம்
பிள்ளை மனமன்றோ பேரின்பம் என்று பெருஞ்சினத்தைத்
தள்ளி விலக்கித் தனியின்பம் காணும் தகவுடையோர்
வெள்ளி முளைப்பபோல் மின்னிப் புவியில் விளங்குவரே!
மன்னை வெங்கடேசன் 

No comments:

Post a Comment