'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Oct 8, 2018

குறள் பத்து

கவிஞர் " இளவல் " ஹரிஹரன், மதுரை
 
சந்தக் கவியழகு சாற்றுந் தமிழழகு
சொந்த மென்க்கொள்ள சுகம்

சுகம்நல்குஞ் சொற்கள் சொலுங்கவிதை தந்தால்
இகமீதிற் றின்பமே எண்ணு.

எண்ணுதல் இன்பம் எழுதுதல் இன்பம்
நண்ணுந் தமிழாலே நாடு.

நாடி நலஞ்செயும் நற்றமிழர் வாழ்வதில்
கோடி பெறுமாம் குணம்.

குணங்காத்துக் கொண்டிடும் கொள்கையுங் காத்து
மணங்கொள்ள வாழ்தலே மாண்பு.

மாண்புடையோர் கூட்டால் மனமோ வசமாகிக்
காண்பதே வாழ்வின் கனவு

கனவினில் காண்பதெல்லாம் கண்முன் நடக்கக்
நனவில் முயற்சியால் நாடு

நாடிடும் நல்லறம் நல்வழி காட்டவே
கூடிடும் நல்ல குணம்

குணமே இனங்காட்டும் கோவில் மணியாய்
உணர்ந்திடும் வாழ்வே உயர்வு

உயர்வு தமிழ்ச்சொல் உணர்ந்து மொழியால்
இயங்கி உலகில் இரு.


No comments:

Post a Comment