'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Oct 29, 2018

பொழுதுகளைத் தா தாயே......!


உலகப் பனிக்குடத்தைஉடைத்துப்பிறந்தவளே !
உலக மொழிகளுக்குன்பனிக்குடத்தை உடைத்தவளே !
தலைமகளே !தமிழ்நிலத்தின்தாய்மடியே ! உதிரத்தால்
விலைபோகாவீரத்தின்விளைநிலத்தைவிதைத்தவளே! |
*
முக்கனிக்கும் தேன்கொடுக்கமுத்தமிழ்ச்சொல் படைத்தவளே!
சொக்கவைக்கும் சொர்க்கத்தைச் சோர்வடைய வைப்பவளே !
விக்கலுக்கும் மருந்தாக விருந்தாகி விழைபவளே !
சிக்கலிலா செம்மொழியே !சீர்நிறைந்த   கவிநடையே !
*
உயிராகி மெய்யாகி உயிர்மெய்  உறவாகிப்
பயிராகி  நெஞ்சுக்குள்பால்வார்க்கும் தாய்நிறையே !
உயரத்தால் வான்துளைத்தும்உருவத்தால் தான் கிளைத்தும்
அயராது வேர்துளைத்தும்ஆள்கின்ற  அருந்தமிழே !
*
மூவேந்தர் பாவேந்தர்முற்றத்தில் விளையாடி
நாவேந்தும் மழலைகளின்நாநின்று நடனமாடி
வாளேந்து வீரத்தில்வந்துநின்று சுழன்றாடி
காவேந்தும் நதிமுகத்தில்காட்சிதரும் தாய்வரமே !
*
உனக்கான  நிகர்தேடி உலகமே    சுழல்கிறது !
கனத்தேதான் கண்சுற்றியுன்காலடியில் விழுகிறது !
இனம்மட்டும் தானுன்னைஅறியாமல் இழக்கிறது !
மனம்மட்டும் தாளாமல் மாயாது கொதிக்கிறது....!
*
உயிர்க்காற்றே உனைவிற்றும்உடல்வாங்கப் பறக்கின்றார் !
அயலார்க்குத் தாய்மடியைஅடகுவைக்கத் துடிக்கின்ற
பயல்களையும் உன்மடியில்பாலூட்டி வளர்க்கின்றாய் !
செயல்வடிவாய் தாங்கவந்தேன்செம்மொழிநீ !  வாழ்த்து !தாயே !
*
உனைவிற்றுப் பிழைக்கேன்நான் !உனைவிட்டும் ஓடேன்நான் !
சினைமாடாய் உனைசுமப்பேன்!சிகரங்கள் அளந்தெடுப்பேன் !
பனைபூக்கும் காலம்வரைபாவலன்நான் உயிர்த்திருப்பேன் !
நினைத்தாலே உயிர்கூட்டும்நின்னைநான் தொழுதிருப்பேன் !
*
தொழுகின்ற விழுதென்றன்தோள்நிமிர்த்த வா தாயே !
விழுமழையின் தூய்மைநான்விதைவிதைக்க வா தாயே !
அழுகையிலா தமிழ்நிலத்தைஅடையாளப் படுத்துதற்கே
பொழுதெல்லாம் உழைத்திருப்பேன் !பொழுதுகளைத் தா தாயே !

-துரைவசந்தராசன்

No comments:

Post a Comment