பாவகை: வெண்பா
1.
கவிஞர் பூங்கா சண்முகம்
முந்தையோ ரீந்த பொலனணி
காப்பதோடு
எந்தமி ழன்னையை ஞாலத்தின்
- பந்தமாக்கும்
அம்பொன் நவமணி சூடுதலுமா
னந்தமெனச்
செம்மையாய்ச் சேர்ப்போம் செவி
2.
'பைந்தமிழ்ச் செம்மல்'
மன்னை வெங்கடேசன்
பிறமொழி மீதே பிரியாத பற்றோ
டுறைகின்ற மாந்தர் உளத்தில் - இறையெனும்
செம்மொழி நற்றமிழின் சீர்தனை யாங்கவர்கண்
செம்மையாய்ச் சேர்ப்போம் செவி
3.
கவிஞர் மதுரா
தம்மை யுணர்ந்தால் தலைநிமிர்ந்து வாழலாம்
இம்மையி லின்பமா மெப்பொழுதும் - அம்மையே
நம்முடன் நாடும் நலமா யிருக்கவிதைச்
செம்மையாய்ச் சேர்ப்போம் செவி
4.
கவிஞர் சரஸ்வதி ராசேந்திரன்
அன்றாடம் ஆற்றுகின்ற அன்புமிகு செய்கைகளே
என்றென்றும் வாய்க்கின்ற இன்பம(து) - இன்றுபோல்
நம்மைநாளும் நின்றுயர்த்தி நன்மைநல்கும் நட்பினைச்
செம்மையாய்ச் சேர்ப்போம் செவி
No comments:
Post a Comment