ஜெகதீசன்
முத்துக்கிருஷ்ணன்
காவிாி
நதியில் படகு சென்று கொண்டிருந்தது
. படகோட்டிப் படகைச் செலுத்திக் கொண்டிருந்தான் . படகிலே நானும் தத்துவஞானி ஒருவரும் பிரயாணம் செய்து கொண்டிருந்தோம்.
படகு
நடுஆற்றில் சென்று கொண்டு இருந்தபோது , திடீரென்று ஆடத் தொடங்கியது . ஆட்டத்திற்கு
என்ன காரணம் என்று பாா்த்தபோது ஒரு
ஓட்டையின் வழியாக நீா்
உள்ளே வந்துகொண்டிருந்தது. உடனே ஓடக்காரன், அந்த
ஓட்டையை ஒரு கந்தல் துணியால்
அடைத்தான் . சிறிது நேரம் , படகு ஆடாமல் , அசையாமல்
சென்றுகொண்டு இருந்தது . திடீரென்று மேலும்
மூன்று இடங்களில் ஓட்டை விழுந்து , தண்ணீா் அதன் வழியாகப் பீறிட்டுக்கொண்டு
வந்தது . முதலில் அடைத்திருந்த ஓட்டையில் இருந்த துணியும் பிடுங்கிக் கொண்டது . ஆக நான்கு ஓட்டைகள்
வழியாகத் தண்ணீா் வேகமாக உள்ளே வந்து கொண்டிருந்தது . படகோட்டி என்ன செய்வது என்று
தொியாமல் விழித்துக் கொண்டிருந்தான் .
இதைப்
பாா்த்த தத்துவஞானி, "ஓட்டைப் படகிலே , மூன்று ஓட்டைப் படகுகள் ஏறிவிட்டன" என்றாா் .
" ஐயா
! நீங்கள் என்ன சொல்கிறீா்கள் ? "
"தம்பி!
மனித உடம்பு ஒன்பது ஓட்டைகள் உள்ள படகுதானே! அதைக்
குறிப்பிட்டேன்"
"ஐயா!
தத்துவம் பேசுவதற்கு இது நேரம் அல்ல.
படகு மூழ்கிக்கொண்டு இருக்கிறது; நாம் தப்பிக்க ஏதாவது
வழியுண்டா? அதைச் சொல்லுங்கள் ".
" தம்பி
! நம்முடைய வாழ்க்கையே ஒரு கடல் போன்றது
. இந்தக் கடலைக் கடக்க வேண்டுமென்றால் , நாம் ஏறிச்செல்லும் படகிலே
ஓட்டைகள் இருக்கக்கூடாது . அதாவது தாமதம்
, மறதி , சோம்பல் , உறக்கம் ஆகிய நான்கு ஓட்டைகள்
இருக்கக்கூடாது . அவ்வாறு இருந்தால் , நடுவழியிலேயே படகு கவிழ்ந்துவிடும் . இதை நான்
சொல்லவில்லை வள்ளுவா் சொல்லுகிறாா் .
நெடுநீா்
மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீராா்
காமக் கலன் . ( 606 )
"ஐயா!
அவசரம் தொியாமல் மீண்டும் பேசிக்கொண்டு இருக்கிறீா்கள். திருக்குறள் கேட்பதற்கு இது நேரம் அல்ல.
நாம் மூவரும் சாகப் போகிறோம்; இந்த ஆபத்திலிருந்து தப்பிக்க
ஏதாவது ஒரு வழி சொல்லுங்கள்;
வெட்டிப்பேச்சு வேண்டாம். "
" தம்பி
! இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தப்பிக்கவும், வள்ளுவா் ஒரு வழி சொல்லுகிறாா்.
"
" அது
என்ன வழி ? "
அறிவற்றங்
காக்கும் கருவி செறுவாா்க்கும்
உள்ளழிக்க
லாகா அரண். ( 421 )
அதாவது
அறிவு இருந்தால், அது நம்மை மரணத்திலிருந்துகூடக்
காப்பாற்றிவிடும். மேலும் அந்த அறிவு, பகைவா்களிடமிருந்து
நம்மைக் காப்பாற்றும் அரண் போல விளங்கும்
."
"ஐயா!
இப்போது எப்படி நம்மைக் காப்பாற்றிக் கொள்ளப் போகிறோம்? அதைச் சொல்லுங்கள் . "
உடனே
தத்துவஞானி சுற்றுமுற்றும் பாா்த்தாா் .
படகின்
ஒரு மூலையில் நான்கு தகர பீப்பாய்கள் இருப்பதைப்
பாாத்தாா் . உடனே அவா், ஓடக்காரனைப்
பாா்த்து, "ஓடக்காரா! அந்த நான்கு பீப்பாய்களும்
காலியாகத்தானே உள்ளன ? " என்று கேட்டாா் .
"ஆம்
ஐயா ! காலியாகத்தான் உள்ளன . "
"அப்படியானால்
அதன் வாயைக் காற்றுப் புகாவண்ணம் இறுக மூடி, அந்த
நான்கு பீப்பாய்களையும், பக்கவாட்டில் ஒன்றன்பின் ஒன்றாக வைத்து, கயிற்றினால் இறுகக் கட்டு "
ஓடக்காரனும்
, நானும் விரைவாக அந்தப் பணியை முடித்தோம் .
"அப்படியே
அந்த நான்கு பீப்பாய்களையும் மெதுவாக ஆற்றினுள்இறக்குங்கள்."
நாங்கள்
பீப்பாய்களை ஆற்றினுள் இறக்குவதற்கும், படகு மூழ்குவதற்கும் சாியாக
இருந்தது . ஒன்றாகக் கட்டிய பீப்பாய்கள் படகு போல மிதந்தன.
நாங்கள் மூவரும் தட்டுத் தடுமாறிப் பீப்பாய்ப் படகின் மேலே ஏறி அமா்ந்தோம்.
பாதுகாப்பாக மறுகரையை அடைந்தோம் .
No comments:
Post a Comment