அன்பானவர்களே! வணக்கம். எம்முடைய முதல் மின்னிதழின் வழியே உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்;ச்சி. இந்த இதழ் தமிழின் செழுமையைத் தாங்கியும், தமிழ் மரபின் சிறப்பினைப் பரப்பி உலகத் தமிழர்களின் ஒட்டுமொத்தக் குரலாக வெளிப்படவும் வெளியாகிறது. தானியங்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு, பற்றாக்குறை காலங்களில் எடுத்துப் பயன்படுத்தும் கலத்திற்குக் குதிர் என்று பெயர். அவ்வாறே தழிழின் தேவை பிற்காலத்தில் வரும் தலைமுறையினருக்குப் பயன்படும் வகையில் பைந்தமிழைச் சேர்த்து வைப்பதால் இம்மின்னிதழுக்குத் தமிழ்க்குதிர் என்று பெயரிட்டுள்ளோம்.
பைந்தமிழ்ச்சோலை முகநூற் குழுவின் மூலம் தமிழ் மரபைச் சிறப்போடு பயின்ற நாம் இவ்விதழ் மூலம் அந்தச் சிறப்பை இத்தரணி வாழ்மாந்தரும் அறியும் பொருட்டு. . இலக்கணக் கட்டுரைகள் இலக்கியக் கட்டுரைகள் தொல்லியல் சார்ந்த, தமிழின் தொன்மம் சார்ந்த கட்டுரைகள், மரபுவழிச் செய்யுட்கள் உரைவீச்சுகள், சிறுகதைகள் போன்றவற்றை ஏந்தி வலம்வருகிறது.
ஒவ்வொரு பக்கத்தையும் ஆழ்ந்து படியுங்கள். அந்தப் படைப்பின் அடியில் உங்கள் கருத்துகளை எழுதுங்கள். குறை நிறைகளை எங்களுக்குத் தெரிவித்து, இந்த மின்னிதழ் முயற்சியை வெற்றியடையச் செய்யுங்கள் என்ற வேண்டுதலுடன்
தமிழன்புடன்
பைந்தமிழரசு பாவலர் மா.வரதராசன்
ஆசிரியர்
ஆசிரியர்
No comments:
Post a Comment