'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Nov 15, 2018

காய்க்கா மரம்

-மதுரா
டாக்டர் வத்ஸலா மெல்ல தோளைத் தட்டினார்..ஐ யம் ஸாரி.. ரிலாக்ஸ் ப்ளீஸ்..

கீர்த்தனாவுக்கு இதயமே வெடித்திடும் போலிருந்தது...எத்தனைப் பிரயாசைகள்? எல்லாமே வீணா?




உச்சியிலிருந்து யாரோ கீழே தள்ளிவிட்டது போன்ற உணர்வில் அவமானமாக உணர்ந்தாள்...

படித்த படிப்பு வாங்கிய பட்டங்கள் பார்க்கும் வேலை...வாங்கும் சம்பளம்...இத்தனையும் ஒரு நொடியில் ஒன்றுமில்லாமல் போய்விட்டது?
பத்துவருடமாக அவளைத் துரத்தும் கேள்விக்கு எப்போதும் விடை கிடைக்கப்போவதில்லை..

வருணும் தன் ஏமாற்றத்தை மறைக்க பெரும்பாடு படுவது தெரிந்தது.. சட்டென்று அடுத்த நிகழ்வை யோசித்தவனாய்... அந்த ஆசிரமத்தின் முகவரி கொடுங்க என்றான்...

அரும்பும் மொட்டுமாய் நிறைவாய் இருந்தது அந்த இடம்... இத்தனைக் குழந்தைகள் பெற்றோரில்லாமல்..... தன்னைப் போன்றோருக்கு குழந்தை கொடுக்காமல்... எரிச்சலாய் இருந்தது....

வேண்டாம்...வாங்க..வீட்டுக்குப் போகலாம்... வெறுப்போடு எழுந்தாள்... வரவர குழந்தைகளோடு வருபவர்களைப் பார்த்தால் கூட கோபம் வருகிறது..

இல்லை னு மறுகுறதை விட இருக்கிறதை ஏத்துக்கலாமே... பெற்றால் தான் பிள்ளையா? வருணின் நியாயங்கள் மேலும் எரிச்சலூட்டின..

கோபமாய் எழுந்தவள் சட்டென தலைசுற்றி விழுந்தாள்... கண்விழித்த போது அவளைச் சுற்றி அத்தனை தேவதைகள்..
வலிக்குதா?
தண்ணி குடிக்கிறீங்களா?
காலையில சாப்பிடலையா?
கரிசனக் குரலில் வழிந்த அன்பில் ஆடிப் போனாள் கீர்த்தனா..

நாம ஏன் ஒரு குழந்தையை தத்து எடுக்கணும்? இவங்க எல்லோரும் எனக்கு குழந்தைங்க தான்.. இனி இவங்களுக்காக உழைக்கலாம் வாங்க..

கீர்த்தனாவின் உள்ளத்தில் பெருகி வழிந்த அன்பில் திளைத்தன அந்தக் குழந்தைகள்..

காய்க்காத அந்த மரத்தின் கிளைகளில் எத்தனை பறவைகள்..
இயற்கையின் படைப்பில் எதுவுமே வீணில்லை...

No comments:

Post a Comment