-சரஸ்வதி ராசேந்திரன்
ஷப்பிங்ஹாலில் தனக்கு வேண்டிய
பொருட்களை வாங்கிக்கொண்டுத் திரும்பிய சுரேஷ்
திகைத்தான் ‘ இவளெங்கே இங்கே ,? என்ற தன் ஆர்வத்தை அடக்கிக்கொண்டு
நடந்தவனை
,’’
சுரேஷ்’’ என்ற குரலைக்கேட்டதும் வேறு வழியின்றி பிருந்தாவை நெருங்கி ’’ என்ன அதிசயம் உன்னைப் பார்த்த்திலே எனக்கு மகிழ்ச்சி “ என்றான் அவளைத்
தான் பார்க்காதது மாதிரி
‘
’சுரேஷ்
உங்களைபார்த்ததில் உங்களைவிட எனக்குத்தான் எல்லையில்லாத மகிழ்ச்சி ‘’
அமைதியாக வந்து
தன்னைபிணைத்த அந்த அன்பின் வார்த்தைகளில் சுரேஷ்
ஒருகணம் மனததை இழந்து நின்றான்
‘’ஏன்
அப்படிச்சொல்கிறாய் பிருந்தா ?’’அன்பு ததும்ப கேட்டான் ‘’பின் என்ன சுரேஷ் உனக்கும் எனக்கும் எத்தனை வருட நட்பு நீ எனக்கு நண்பனாய் இருந்ததைவிட என் அம்மாவுக்கு ஒரு பிள்ளையாய் இருந்தாய் ஏன் என்
கல்யாணத்தின்போதுகூட எத்தனை வேலைகளை நீயாக
அள்ளிப்போட்டுக்கொண்டு செய்தாய் நான் புக்ககம்
கிளம்பும்போது உன்னிடம் சொல்லிக் கொள்ள முடியவில்லயே என்
நான் எத்தனை வருத்தப்பட்டேன் தெரியுமா? அதன் பின் ஒரு தடவைகூட
நீஎன்னைப்பார்க்க வரவில்லையே ஏன் ?’’
‘’ஏன் இப்படி பேசுகிறாய் ?உன்வீட்டுக்கு அடிக்கடி வந்து பார்த்துப் போவதில்தான் அன்புக்காட்ட முடியுமா வராமலிருப்பதிலும் அன்பை காட்ட முடியும் “அவன் தன் அந்தரங்கத்தில்
பொங்கிய ஏதோ ஒரு உணர்ச்சிவேகத்தைச் சமனப்படுத்த
முனைவதை பிருந்தாவால் புரிந்துகொள்ளமுடிந்தாலும்
அது என்ன என்று புரியவில்லை
‘’என்ன சொல்கிறாய் சுரேஷ் ?’’
‘’ நான் உன் வீட்டுக்கு அடிக்கடி வருவதை விட வராமலிருப்பதுதான் நம் உண்மையான நல்ல
நட்பிற்கு அடையாளம். நான் வருவது உனக்குப்பிடிக்கும்
நான் வராமலிருப்பது அசோக்கிற்கு ரொம்ப பிடிக்கும் நான் வராமலிருப்பது உனக்கும் அமைதியையக் கொடுக்கும்
அதனால்தான்உன்னைபார்க்க வர வேண்டும் என்ற துடிப்பை அடக்கிகொண்டிருக்கிறேன்”
‘’இப்ப புரிகிறது சுரேஷ்
என் கணவர் நம் நட்பை சந்தேகப்படுகிறாரோ ? நீ வா சுரேஷ் என்னுடன் நான் கணவரிடம் பேசுகிறேன் இதைப்பற்றி’’
‘’வேண்டாம் பிருந்தா வாதம் செய்து எதையும் நிரூபிக்க முடியாது வாழ்ந்து காட்டித்தான்
நிரூபிக்கணும் நீ எந்த
பிரச்சனையும் இல்லாம தீர்க்க சுமங்கலியா நூறு
வருஷம் நல்லா வாழணும் அதுபோதும் நண்பன் சாகலாம் நட்பு சாகாது புரிந்து கொள் நாம தனியா ரொம்ப நாழி பேச வேண்டாம்
நீ வீட்டுக்குப்போ எதையும் காட்டிக்கொள்ளாதே மனவருத்தமும் படாதே அதுதான்
நம் நட்புக்கு நீ செய்யும் மரியாதை ‘’
சுரேஷ் விடைபெற்றான் ‘ எப்பேர்ப்பட்ட நண்பன் இவன்/?
நான்
கொடுத்து வைத்தவள்... சொல்லிக்கொண்டாள் மனதிற்குள் பிருந்தா
No comments:
Post a Comment