'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

May 15, 2019

ஆசுகவிச்சுழல் என்னும் ஆசுகவிப்போட்டி

காணொலிக் கவியரங்கம், சிந்துப்பாட்டரங்கம், ஆசுகவியரங்கம் என்று இணையக் கவிதைக் குழும வரலாற்றில் தனிச்சிறப்பான பல செயல்பாடுகளை முன்னெடுக்கும் நம் பைந்தமிழ்ச்சோலையில் அடுத்த முன்னெடுப்பாக ஆசுகவிச்சுழல் என்னும் இணைய ஆசுகவி யரங்கம் 10.02.2019 அன்று நடைபெற்றது. முகநூல் வரலாற்றிலேயே முதன்முதலாக நடைபெற்ற இப்போட்டியில் அரங்கம் நான்கு அமர்வுகளாகப் பிரிக்கப்பட்டது.

             முதல் அமர்வு - காலை 9.00 முதல் மதியம் 12.00 வரை
             இரண்டாம் அமர்வு - மதியம் 12.00 முதல் மாலை 3.00 வரை
             மூன்றாம் அமர்வு - மாலை 3.00 முதல் மாலை 6.00 வரை
             நான்காம் அமர்வு - மாலை 6.00 முதல் இரவு 9.00 வரை -

ஒவ்வோர் அமர்விற்கும் ஒரு பைந்தமிழ்ச் செம்மல் தலைவராக நியமிக்கப்பட்டார். ஓர் அமர்வு முடிந்த பிறகே அடுத்த அமர்வின் தலைவர் யாரென்றும், தலைப்பும் தெரிவிக்கப்பட்டது. தலைவர் தம் கவிதையைப் பதிவிட்டதும் தலைவரால் அழைக்கப்பட்ட முதல் கவிஞருக்கான அரைமணி நேரம் தொடங்கியது. அவர் தலைவர் கூறும் பொருண்மையில் அவரது ஈற்றுப்பாடலின் ஈற்று அரைடியை முதலாகக் கொண்டு 3 அல்லது 4 விருத்தங்கள் அடங்கிய தம் கவிதையைத் தலைவர் வெளியிடும் பதிவின் கருத்துப் பகுதியில் அந்தாதியாக வழங்கினார். இவ்வாறு தொடர்ந்து அடுத்தடுத்த அரைமணி நேரத்துக்கு ஒரு கவிஞர் என அமர்வுகள் நிறைவுபெற்றது.

முதல் அமர்வு:
தலைவர்: மரபு மாமணி பாவலர் மா. வரதராசன்
தலைப்பு: அன்பைப் பொழிகுவாய் நன்னெஞ்சே

இரண்டாம் அமர்வு:
தலைவர்: கவிஞர் வெங்கடேசன் சீனிவாச கோபாலன்
தலைப்பு: தாய்மையைப் போற்றுவோம்

மூன்றாம் அமர்வு:
தலைவர்: கவிஞர் வள்ளி முத்து
தலைப்பு: மழலைக் குறும்பு

நான்காம் அமர்வு:
தலைவர்: கவிஞர் விவேக் பாரதி
தலைப்பு: நாளை நமக்கான நாள்

பங்கேற்றுத் தங்கள் திறனை வெளிப்படுத்தி நம்மைக் கவிதையின்பத்தில் ஆழ்த்திய பாவலர்கட்குப் பைந்தமிழ்ச்சோலை குழுமம் பரிசு வழங்கியது. இந்தப் பரிசை, ஆசுகவிப்பட்டத்தை அடைய ஒரு தொடக்கச் சுழியாகக் கருதலாம். இதில் பங்கேற்றவர் நம் சோலை விழாவில் நேரடியாகப் பங்குபெற்று ஆசுகவிப்பட்டம் பெறத் தகுதியானவராகிறார்.

அனைவருமே குறித்த நேரத்தில் விரைந்து எழுதினர். சிலர் மிகச்சிறப்பாக எழுதினர். சிலர் பதற்றத்தால் பொருண்மையும், இலக்கணமும் சிதற எழுதினர். எனவே 'குறித்த நேரம், பொருண்மை, சொல்லாடல், இலக்கணம் என்னும் அளவீடுகளை வைத்துச் சான்றிதழ் வழங்க முடிவுசெய்யப்பட்டது. நடந்துமுடிந்த போட்டியில் சட்டென்று அறிவித்த தலைவர் பொறுப்பைத் திகைக்காமல் ஏற்றுத் திறம்பட வழிநடத்தியும், யாப்பை மாற்றியும் தங்கள் ஆற்றலை வெளிப்படுத்திய அமர்வு தலைவர்களுக்கு விரைகவிவேந்தர் என்ற சான்றிதழும், சிறப்பான பொருண்மையுடனும், இலக்கணச்செழுமை யுடனும், தேர்ந்த சொன்னடையும் கொண்ட பாடலைச் சரியான நேரத்தில் வழங்கிய கவிஞர்க்கு விரைகவிவாணர் சான்றிதழும், குறித்த நேரத்தில் எழுதினாலும் இலக்கணம், பொருண்மை, சொல்லாட்சி இவற்றில் இன்னும் சற்று மிளிர்ந்தொளிர வேண்டி யிருப்பதால் அவர்களுக்கு விரைகவிச்சுடர் சான்றிதழும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களைப் பைந்தமிழ்ச்சோலையின் சார்பில் வாழ்த்தி மகிழ்கிறோம்.

விரைகவி வேந்தர் சான்றிதழ் பெற்றவர்கள்:

             கவிஞர் வெங்கடேசன் சீனிவாசகோபாலன்
             கவிஞர் வள்ளி முத்து
             கவிஞர் விவேக் பாரதி

விரைகவிவாணர் சான்றிதழ் பெற்றவர்கள்:

             கவிஞர் தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
             கவிஞர் சாமி சுரேசு
             கவிஞர் கவினப்பன் தமிழன்
             கவிஞர் ஜெனிதா அசோக் மேத்யூ
             கவிஞர் இரா.கண்ணன்
             கவிஞர் ஏகாபுரம் வெங்கடேசு
             கவிஞர் விஜய்
             கவிஞர் வஜ்ஜிரவேலன் தெய்வசிகாமணி
             கவிமாமணி சேலம்பாலன்
             கவிஞர் அழகர் சண்முகம்

விரைகவிச்சுடர் சான்றிதழ் பெற்றவர்கள்:

             கவிஞர் நிர்மலா சிவராசசிங்கம்
             கவிஞர் மெய்யன் நடராஜ்
             கவிஞர் தர்மா
             கவிஞர் மஹ்மூத்பந்தர் நியாஸ் மரைக்காயர்
             கவிஞர் நெடுவை இரவீந்திரன்
             கவிஞர் ஷேக் அப்துல்லாஹ்

பங்கேற்றுச் சிறப்பித்தவர்கள்:

             கவிஞர் கற்றுப்பட்டு பி.கே.. தாரா.
             கவிஞர் பாலாஜி சஞ்சீவி
             கவிஞர் மாலதி திரு
             கவிஞர் மோகன சுந்தரம்
             கவிஞர் சோமு சக்தி

ஆகியோருக்கும் வாழ்த்தும் பாராட்டும் உரித்தாகுக. அடுத்தமுறை வெற்றிபெற வாழ்த்துகள்.

ஒருமித்த அனைவரின் அணியத்தாலும், தெளிந்த திட்டமிடலாலும் ஆசுகவிச்சுழல் மிகமிகச் சிறப்பாக நிகழ்ந்து முடிந்தது. மனத்திற்கும் மிக்க நிறைவாயமைந்தது.
தமிழன்புடன்
மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

No comments:

Post a Comment