'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Dec 14, 2019

குறித்தபடி தொடுத்த பாடல்கள் - 10


வெண்கலிப்பா

1.  கவிஞர் சண்முகம் பூங்காவனம்

நிலத்துவிதை  நெல்மணியால்     குவைக்குன்று  பெருக்கிடுவோம்
கலப்பின்றிச்  சொல்பெருக்கித்     தனித்தமிழின் அறம்வளர்ப்போம்
இலக்கணத்தைப்  பின்பற்றி இன்றமிழைக் காப்போமே
உளங்கொள்க  களிறுகட்டுங்  களிறு

தரவுகொச்சகக் கலிப்பா

2. கவிஞர் சோதி செல்லத்துரை

இலக்கணத்தைப் பின்பற்றி இன்றமிழைக் காப்போமே
புலத்திலுமெம் தாய்த்தமிழைப் புன்சிரிக்க வைப்போமே
இலத்தினிலே யெம்மழலை இன்தமிழும் பாய்ந்துவந்து
கலக்கையிலே காற்றோடு காதினிலே தேன்பாயும்!

3. கவிஞர் பொன். இனியன்

வழக்கொழியா  வண்ணத்து வாழ்மரபு  தாங்காட்டி
நலக்குறவே  செய்யுள்தான் நாமியற்று  மாறாக
மலைப்பறவே  கற்பிக்கும் மாவரத  னாருண்டால்
இலக்கணத்தைப்  பின்பற்றி இன்றமிழைக் காப்போமே!

No comments:

Post a Comment