கவிஞர் சரசுவதி ராசேந்திரன்
எழுசீர் விருத்தம்
எத்தனை செல்வம் தேடிய போதும்
    என்னுயிர் பிள்ளையே உயர்வு
சொத்துகள் என்றும் பெரிதென ஆகா
    சொந்தமுன் வாரிசே விடியல்
இத்தரை மீதில் இல்லற இணைப்பாய்
    இனித்திடும் மழலையே சொர்க்கம்
முத்தென வந்தாய் முழுமதி நிலவே
    முகிழ்த்திடும் சிரிப்பதன் அழகே!
No comments:
Post a Comment