கவிஞர் பொன் இனியன்   
(பட்டாபிராம்)
கட்டளைக் கலித்துறை
பூவிற்  தொடங்கிடும்  பொய்யில் 
கலித்துறை போற்றுமாறாத் 
தாவில்  லதுவாய்த்  தளைகெடாக் 
கட்டளை தானியற்ற
பாவல்லார் சொன்ன படியாய்  முயல்வேன்
பயந்தபடி 
பூவஃதென்  னெஞ்சிற்  புதுக்கா தெனிலோர் புயல்வருமே                                                    1
பூவும்  மணமும்  பொலிதரு சோலையாய்ப் பொத்தியவர்
ஆவி செயலத்  தனையுந்தா னீயும்
வரதனவர்
மேவிய வர்க்கே  மிகுந்தூட்டிக்
கற்பிக்கும் மேன்மையராம்
போவுபொல்  லாங்கெவர் போய்ச்செயி
னாங்கோர் புயல்வருமே                                     2
பூப்போலும் மென்மைப் பொலியுநல் லுள்ளம்; பொருள்விளங்க
யாப்பும்  மரபுமா யாந்தொடை யெல்லாமும்
யத்தனித்தே
பாப்புனை  மேலான  பாவலர் 
நெஞ்சத்தும் பாவிகளால்
போப்போ யெனுமாறு பொல்லாங்  குறினோர்
புயல்வருமே                                               3
பூவோடு  சேர்ந்து  பொருந்திய நாரும் பொலிவுறுமே
பாவோடு தானிசைப் பண்விளங் காற்றினில் பாடுறுமே
தாயோ டருஞ்சுவை  தான்போகுங்
கல்வியுந் தந்தையோடாம் 
போயாடி வீற்றாய்ப் பொலிவிட மின்றேல் புயல்வருமே                                                        4
பூப்போலும்  மென்மை  புளகாங் 
கிதமாக்கும் வாய்மழலை
யாப்பும்  புதுக்குமே  யாழிசை 
யுந்தோற்கும் யாயெவர்க்கும்
வாய்த்தபே  றாகும்  மதலை  யுடையவர்
வையமிதில்
போத்த  ருதலானார்  புல்லார் மனத்துப் புயல்வருமே                                                            5
பூநாறுங்  கூந்தலாள் புன்னகை  யாலெனைப் பூட்டினளே
தானேயும்  தன்னுள்  குதிபோடு தென்னுளம் தையதக்க
ஆமா(று) எனையே யவள்வந் தணைவாளேல் ஆவிதங்கும்
போமாறு தானாயின் பொக்கெனும் 
நெஞ்சிற் புயல்வருமே                                               6
பூத்ததெ லாம்இங்குப் பூவாமா ஒன்றிடப் போயமரும்
வாய்த்தவா றாக  வசந்தநன் மார்பும்
வனிதைதோளும்;
நோய்த்த  பிறிதோ  நுடங்கியே பாடைமேல் நூறிடவாம்
போய்வீசு தென்றலும் மாறியோர் நாளில் புயல்வருமே                                                        7
பூவுக்கும்  மென்மைக்கும் பொத்திநல்
லொப்பாய்ப் பொருந்திடவே
நாவுக்(கு) இனிமை தரும்பெண் வழுத்தி நயந்துரைத்தே
ஓவாது நாளுமிங்(கு) ஓச்சிக்கொண் டேதான் ஒடுக்குகிறோம்
போமாறொன்  றில்லாப் பொழுதில்  அவளாற் புயல்வருமே                                               8
பூவா  தலையாநீ போட்டால் தெரியுமே
பொள்ளெனவா
நீயா யிலைநானா  நிச்சய  மாகும் நினைவதுவாய்க்
காயாத வெய்யிலிற் காய்ந்துதீய் கின்றோமால் காப்புறவே
போவாத வெக்கைதான் போமாறு வானில் புயல்வருமே                                                     9
பூவென்னாம் நெற்றிக்குப் பொட்டென்னாம் பாடையிற் போகையிலே
வாவென்று  நல்லோர்  வரவேற்க வையத்து வாழ்ந்தொருவன் 
நோவந்த போதும்  நுடங்குமா  றாகானாம் நொந்துபிறர்   
போவென்னு மாறான பூரியர் வாழ்வில் புயல்வருமே                                                           10
No comments:
Post a Comment