1.       கவிஞர்
கந்தையா நடனபாதம்
கலித்தாழிசை
கொடுமைகள் புரிந்துவிட்டுக் கோயிலுக்குப் போகாதே 
கடுந்தவங்கள் செய்வதுபோல் கைகூப்பி வணங்காதே 
தடுமாறி வாழாதே தடம்மாறித் தாழாதே 
அடுத்தவரின் நெஞ்சமதை அன்புடனே 
அரவணைத்துச் 
    சொல்லாலும் செயலாலும் போற்றிநின்றா லதுசுவையே ! 
2.       கவிஞர்
வ.க.கன்னியப்பன்
தரவு கொச்சகக் கலிப்பா 
எடுத்திடுங் காரியங்க ளினிதாக நடந்திடவே
வடுவற்ற வாழ்வினையும் வளமாக வாழ்ந்திடவே
நெடுநாளும் நின்ற(ன்)புகழ் நீடித்து நிலைத்திடவே
தடுமாறி வாழாதே தடம்மாறித் தாழாதே! 
3.       கவிஞர்
பூங்கா  சண்முகம், புதுச்சேரி
தரவு 
கொச்சகக் கலிப்பா
கடுநஞ்சை 
உமிழ்ந்திடினும் 
நச்சரவை 
மன்றாடி
மடுபொதிதன் 
தலையேற்று 
வாழ்வளித்தா 
னறியாயோ
கெடுமதியும் 
சுடுசொல்லும் 
கேடுநல்கு 
மதனால்
தடுமாறி 
வாழாதே! 
தடம்மாறித் 
தாழாதே!    
No comments:
Post a Comment