மரபு மாமணி
பாவலர் மா.வரதராசன்
(தெம்மாங்குக் கண்ணிகள்)
கொத்தித் திரியும் கோழிக
ளுக்குக்
குறிக்கோள்
எதுவு மிருக்காது - தமிழ்
நத்திப் பிழைக்கும் நாய்களுக்
கிங்கே
நன்மனம்
துளியு மிருக்காது! 1
தன்மொழிப் பற்றைத் தவறியும்
மறவான்
தமிழில்
பற்றே பிறக்காது - அந்தத்
தன்னலக் கயவனின் பின்னணி
ஆய்ந்தால்
தாய்மொழி
தமிழாய் இருக்காது! 2
வள்ளுவம் எங்கள் வாழ்வியல்
என்றால்
மறுப்பான்
துடிப்பான் பரிதவிப்பான் - பின்
வள்ளுவன் எங்கள் சாதியே
என்பான்
வண்ணம்
பூசி மகிழ்ந்திடுவான் 3
தமிழில் பிறமொழிச் சொற்களை
எந்தத்
தயக்கமும்
இன்றிக் கலந்திடுவான் - அது
தமிழை வளர்க்கும்
வழியே என்பான்
சரம்சர
மாய்ப்பொய் அளந்திடுவான்! 4
( - அந்தத்
தன்னலக் கயவனின் பின்னணி
ஆய்ந்தால்
தாய்மொழி
தமிழாய் இருக்காது!)
மரபைப் போற்றும்
செயல்கள் எவையும்
மதிக்கவும்
மாட்டான் சிதைத்தொழிப்பான் - தமிழ்
மரபு கவியிலும்
பிழையைச் செய்வான்
மரபைக்
கொன்று புதைத்தொழிப்பான்! 5
வலிமிகும் என்றால் மிகாமல்
எழுதி
வழக்கப்
படுத்துவோம் எனச்சொல்வான் - அவன்
வலிமிகா
தென்றால் "நல்லா யிருக்கே"
மிகுந்தால் என்ன கேடென்பான்! 6
( - அந்தத்
தன்னலக் கயவனின் பின்னணி
ஆய்ந்தால்
தாய்மொழி
தமிழாய் இருக்காது!)
யாப்பில் பலவிதப் பிழைகளைச்
செய்வான்
அதனால்
என்ன இழப்பென்பான் - நீள
ஆப்பை வைப்பான்
ஆலாம் தமிழை
அசைத்துத்
தள்ள முயற்சிப்பான்! 7
அரைகுறை யாகக் கற்றுக்
கொள்வான்
அதற்குள்
ஆசான் ஆகிடுவான் - புகழ்
விரைவாய்ப் பெறுவான் சான்றிதழ்
விருதை
விலைகொடுத்
தேதான் வாங்கிடுவான்! 8
( - அந்தத்
தன்னலக் கயவனின் பின்னணி
ஆய்ந்தால்
தாய்மொழி
தமிழாய் இருக்காது!)
இலக்கிய வட்டம் பேரவை
என்பான்
இலக்கோ
எதுவும் இருக்காது - பணம்
பலப்பல வாகச்
சுருட்டிக் கொழுப்பான்
பைந்தமிழ்த்
தொண்டே நடக்காது! 9
தமிழ்தமிழ் தமிழ்தமிழ் தமிழ்தமிழ்
என்பான்
தன்பிள்
ளைக்குத் தரமாட்டான் - அவன்
தமிழை விடுத்துத்
தன்வீட் டிற்குள்
தாய்மொழிப்
பற்றை விடமாட்டான்! 10
( - அந்தத்
தன்னலக் கயவனின் பின்னணி
ஆய்ந்தால்
தாய்மொழி
தமிழாய் இருக்காது!)
தையே எங்கள்
புத்தாண் டென்றால்
தைதை
தைதை எனக்குதிப்பான்! - மிகு
பொய்யைப் புரட்டைச் சேர்த்துச்
சித்திரை
புத்தாண்
டென்று கதையளப்பான்! 11
வாழ்க்கை நடத்தத் தமிழைப்
பேசி
மானங்கெட்டு
வாழ்ந்திடுவான் - இழி
சீழ்க்கை யாகப் புழுத்து
நெளிந்து
சீரழி
வாக வீழ்ந்திடுவான்! 12
( - அந்தத்
தன்னலக் கயவனின் பின்னணி
ஆய்ந்தால்
தாய்மொழி
தமிழாய் இருக்காது!)
தம்பீ தம்பீ
விழித்துக் கொள்வாய்
தமிழின்
புண்ணை ஆற்றிடுவாய் - உன்னை
நம்பி இந்தத்
தமிழினம் இருக்கு
நாட்டை
உலகில் ஏற்றிடுவாய்! - தமிழ்
நாட்டை
உலகில் ஏற்றிடுவாய்! 13
No comments:
Post a Comment