ஆசிரியர் பக்கம்
அன்பானவர்களே! வணக்கம். எம்முடைய முதல் மின்னிதழின் வழியே உங்களைச் சந்தித்த மகிழ்;ச்சியின் தொடர்ச்சியாக இரண்டாவது இதழின்வழியே மீண்டும் சந்திக்கிறேன்
. உலக மொழிகளிலே ஒப்பிலாச் செழுமையையுடையது நம் செந்தமிழ்;.
அளவிறந்த இலக்கியங்களைத் தன்னகத்தே கொண்டு, என்றும் மாறா இளமையுடன் திகழும் இம்மொழியில் மட்டுமே எழுத்துக்கும், சொல்லுக்கும் மட்டுமின்றிப் பொருளுக்கும் இலக்கணம் வகுக்கப்பட்ட சிறப்புக்குரியது.
ஆண்டவனைத் தொழுவதாக இருந்தாலும் அழகு தமிழில் பாடித் தொழத எம்மனோர், அகவழி பிறந்த காதலையும் இனிய தமிழில் பாடிவைத்தார்.
கண்வழிப் புகுந்து கருத்தில் நிறைந்த காதல் வாழ்விற்கான இலக்கணத்தையும் வகுத்த எந்தமிழ் இலக்கியங்களைப் போற்றிப் பாதுகாத்துவரும் அகவிலக்கியங்களைப் படித்துணர்ந்தாலே நாட்டில் ‘வன்புணர்வுக் கொடுமைகள்’ நிகழா.
மீண்டும் பண்புகளை வளர்த் தெடுக்கும் கல்விமுறை வேண்டும் என்ற சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
தன் பிள்ளை பணங்கொழிக்கும் கல்வியைப் பயில வேண்டும் என விரும்பும் பெற்றோர்களும் இந்த உண்மையை உணர்தல் நலம்.
தழிழன்புடன்
பைந்தழிழரசு பாவலர் மா.வரதராசன் ஆசிரியர்
No comments:
Post a Comment