பாவை
முப்பது
மன்னை வெங்கடேசன்
சென்ற இதழ்
தொடர்ச்சி ...
நாயகனாய்
நின்றவொரு நந்தகோ பன்தன்இல்
வாயிற்கண்
சென்றங்கு வாய்மொழிந்த – ஆயர்குலச்
சிட்டுரைப்
பாவதுவும் செந்தமி ழன்னைக்குப்
பட்டியைந்த
நல்லம் பரம். 16.
(ஆயர்குலச்
சிட்டு = ஆய்ச்சிப் பெண் ;
அம்பரம் = துணி)
அம்பரம் தண்ணீர்
அனைத்தும் தருவாயே
எம்பெருமான்
நந்தனே என்றேத்தி – உம்பர்கோன்
தன்னையும்
போற்றியவன் தாளணையும் கோதையுரை
உன்னியே வாழ்வினை
உந்து 17.
உந்து மதகளிற்றன்
உண்ணினையும் நப்பின்னாய்
வந்து திற;கதவை வாவென்று – நந்த
மகனுடைய வாயிலில்
மன்னியே நின்று
புகன்றதனை
நெஞ்சிற் புகுத்து. 18.
குத்து
விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டிலுறை
மத்தக வேழமொத்த
மாயவனை – வித்தகமாய்
வாழ்த்து
முரைநெஞ்சில் வைத்தவரை எஞ்ஞான்றும்
வாழ்த்துவர்முப்
பத்துமூ வர். 19.
முப்பத்து
மூவர்க்கும் முன்னிற்கும் தேவனை
நப்பின்னை
தன்னொடு நன்கழைத்துச் – செப்பிடு
வாரதைக்
கோதையெனும் வார்குழலாள் தந்திட்டாள்
ஏருற ஓர்கவி யே! 20.
ஏற்ற கலங்கள்
எதிர்பொங்கப் பால்சுரக்கும்
ஆற்றலுடை
யாவினங்கொள் ஆயவனைப் –
போற்றி
விளித்துரைத்த
பாவியந்தேன் வேண்டினேன் கண்டு
களித்திருக்க
வாயிரங் கண். 21.
அங்கண்மா ஞாலத்
தரசின்கீழ் சிற்றரசர்
சங்க
மிருப்பார்போல் தாமங்குச் – செங்கண்மால்
பொன்னடிக்கீழ்
ஆய்ச்சியர் போந்ததனைக் கோதையுன்சொல்
மன்னுமனம்
தாருமம் மா! 22.
மாரி
மலைமுழைஞ்சில் மன்னிய சிங்கம்போல்
மூரி நிமிர்ந்து
முழங்கிடெனச் – சீரிய
சிங்கமாய் ஏகும்
திருமாலைக் கோதையும்
அங்ஙனே
வேண்டினாள் அன்று. 23.
அன்றிவ் வுலக
மளந்த பெருமானைச்
சென்றங்குப்
பாடித் திருமாலே – குன்றெடுத்தாய்
இன்றுன்னைப் பாட
இரங்கென்றாய் கோதையே
உன்றனுக்(கு)
என்னே ஒருத்து. 24.
(ஒருத்து – மன ஒருமைப்பாடு)
ஒருத்தி மகனாகி
ஓரிரவில் மற்றை
யொருத்தி
குடிலில் வளர்ந்த – திருமறு
மார்பனைப்
போற்றிய மாதவள் தாள்பணி
வார்தமை
யொன்றுவான் மால். 25.
மாலே மணிவண்ணா
வாராய் அருள்தாராய்
பாலன்ன சங்கொடு
மற்றெல்லாம் – ஆலின்
இலையாய் அருளென்
றியம்பிய கோதை
குலமகளின்
பாதமதைக் கூடு. 26.
கூடாரை
வெல்லும்சீர் கோவிந்தன் தன்னையே
வாடாத சொற்கொண்டு
பாடியே – மாடா
மனைத்தும்
தரவேண்டி மன்னியகோ தைப்பா
மனத்துச்
செருக்கற வை. 27.
.
கறவைகள்
பின்சென்று கானேகும் ஆயர்
குறைவிலாக்
கண்ணனைக் கூவிச் – சிறுபேர்
அழைப்பதனைப்
பாடும் ஆண்டாள் அடிசேர்ந்(து)
இழைபவர் ஆவர்மா
சிற்று 28
(மாசிற்று = மாசு இற்று = அழுக்கின்றி)
.
சிற்றஞ் சிறுகாலே
சென்றவனைக் கும்பிட
லுற்றநல்
லாய்ச்சியர் ஓதியதைக் – குற்றமிலாப்
பாகெனவே கோதையுரை
பாவெள் ளமதற்கீ(டு)
ஆகிடுமோ வங்கக்
கடல். 29
வங்கக்
கடல்கடைந்த மாதவனை நாடியே
அங்கப் பறைகொண்ட
வாற்றினை – இங்குரைப்பார்க்
கின்பம் பயக்கு
மெனவுரைத்த நற்கோதாய்
மன்னுயிர்
காத்திடம் மா! 30.
No comments:
Post a Comment