'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jun 14, 2020

குறித்தபடி தொடுத்த பாடல்கள் – 16

கட்டளைக் கலித்துறை

1.       கவிஞர் பொன் இனியன்பட்டாபிராம்
பண்ணும் படியினிற் பாடல்  இயற்றிப் பலவகையால்
வண்ணங் குழைத்து வகைபல வாக்கி  வரித்திடவும்
நண்ணுவ ரெல்லாம் நயத்தகு  மாறான நற்கருத்தே
எண்ணத் தெழுவஃ தெழுத்தா எழுவஃ  தினிமைதே

2.       கவிஞர் ஷேக் அப்துல்லாஹ் அதிராம்பட்டினம்.
உண்ணு முறவோர் உவப்ப தியற்கை யுணர்ந்திடலாங்
கண்ணுங் கருத்தாய்க் கவனத்துட் தானாய்க் கருதிடவே
திண்ணமஃ துள்ளந் திரண்ட சமத்து ளெழுந்தவைகள்
எண்ணத் தெழுவஃ தெழுத்தா யெழுவஃ தினிமையதே !

3.       கவிஞர் வ..கன்னியப்பன்
வண்ண மினிதா யிருந்திடி லோவியம் வான்முகிலாம்;
உண்ணு முணவி லுறுசுவை யுண்டா முபசரிப்பால்;
தண்ணளி கொண்டாற் றருமமு மோங்கித் தழைந்திடுமாம்;
எண்ணத் தெழுவஃ தெழுத்தா யெழுவஃ தினிமையதே.

4.       கவிஞர் செல்லையா வாமதேவன்
மண்ணில் விரைந்து வளையும் நதியும் மழைமுகிலும்
வண்ணம் வரையும் வரையும் வயலும் வனமயிலும்
கண்ணிற் கவியுங் கவினுறு காட்சி கவிதையென
எண்ணத் தெழுவஃ தெழுத்தா யெழுவஃ தினிமையதே.

★★★

No comments:

Post a Comment