கவிஞர் சரஸ்வதிராசேந்திரன்
எழுசீர் விருத்தம்
நல்லதை எண்ணி நலத்துடன் வாழ
நன்மையே நடந்திடு மென்றும்
அல்லதைத் தள்ளி அறிவுடன் நிற்க
அற்புத மாகுமே வாழ்வு
கல்மனம் கொண்டால் கற்றவர் மதியார்
கருணைம னத்தினா லென்றும்
வல்வினை நீக்கி வாழ்வினை யேற்றால்
வணங்கிடும் குவலய முனையே
No comments:
Post a Comment