பைந்தமிழ்ச் செம்மல் செல்லையா வாமதேவன்
தனதன தனதன தனதானா)
அறுமுக வடிவொடு மழகிய தமிழொடும்
அறிவுடன் அருளொடு வருவேலா
அமுதெனு மொழியினில் அறவழி முழுவதும்
அணியுடன் அருளிய குருநாதா
குறுநகை முகமது குவியவு மதிமிகு
குடுகுடு கிழவியை அழைவேலா
கொடுபழ மெனமுது மொழியுரை இனியவள்
குமரநின் அடியினில் அமர்வாளே
சிறுகனி தரவது சுடுகனி யெனவிடை
சிலநொடி திணறவும் விடுவேதா
சிறுநகை ஒலியொடு சுடுபழம் அருளினை
சிறுமணல் அகவிருள் அழிதீரா
உறுவினை யகலவும் உளவிருள் அகலவும்
உதவுவை மயில்மிசை வருநாதா
ஒளியெனு மழகிய திருவெனு முருகநின்
உறவெனும் அருளருள் பெருமாளே!
No comments:
Post a Comment