கவிஞர் நா.பாண்டியராசா
நேரிசை வெண்பா
கூடும்
இனமது கூடிநின்று பேசிடப்
பாடிடும்
நாவது பண்பாட்டே - நாடிட
ஆடிடும்
உள்ளுணர்(வு) ஆகாயம் ஏறிடத்
தேடிப்
பருகிடு தேன்.
மேடுபள்ளம் வாழ்வில் மலையென நின்றேதான்
சாடும்
சகுனியின் சூத்திரம் - ஆடுமே!
ஓடாது
நின்றிருந்(து) ஓங்கார மிட்டேதான்
வாடாது
நின்றுநீ வாழ்.
No comments:
Post a Comment