அடுக்குத் தொடரில் ஒற்று மிகாது என்று ஒரு விதி இருக்கிறது. இதன் விதிவிலக்குகளைக் கொஞ்சம் விவரமாகச் சொல்ல முடியுமா?
- கவிஞர் சுபாஷினி ரமணன்
அடுக்குத்தொடராவது பெயர்ச்சொல்லோ வினை முற்றோ பிறவோ சில குறிப்புக்காய் அடுக்கி வருவதாம்.
அடுக்குத் தொடரில் வலி மிகாது எனப் பொத்தாம் பொதுவாகச் சொல்லலாகாது.
·       
பாம்பு பாம்பு
·       
நின்றன நின்றன
·       
தீ தீ
·       
சீ சீ
இவை இயல்பு
·       
கொத்துக் கொத்தாக
·       
பூப்பூவாய்
·       
திரும்பத் திரும்பச் சொன்னேன்
·       
படித்துப் படித்துத் தெரிந்துகொண்டேன்
·       
தேடித் தேடிக் களைத்தேன்
இவ்வாறு மிகும்
·       
பலபல, பலப்பல, பல்பல, பற்பல
·       
சிலசில சிலச்சில, சில்சில, சிற்சில
இவ்வாறும் வரும்.
இவற்றை விதி விலக்குகள் என்று சொல்லாமல் அவ்வவற்றின் இலக்கணக் குறிப்புகளைக்
கண்டு அவ்வாறே கொள்க.
No comments:
Post a Comment