கவிஞர் மெய்யன் நடராஜ்
கயிறெடுத்துச்
சுருக்கிட்டுக் கழுத்தினிலே மாட்டிக்
காலனுக்(கு) அழைப்பிதழைக் கைநீட்ட லாக
உயிரடங்கு
மெனவறிந்தும் உல்லாச மாக
ஊரடங்கு நேரத்தில் ஊர்சுற்று வோரே
வயிறெரியும்
பசிக்கொடுமை வாட்டுகின்ற ஏழ்மை
வந்துநிற்கும் போதினிலும் வாசலினைத் தாண்டா(து)
உயிர்காக்கும்
எளியவர்கள் துணிச்சலறிந் திந்நோய்
உடன்தொற்றிப்
பரப்புதற்குத் துணைபோகா தீரே!
பாதுகாப்பு
தனைவழங்கப் பாடுபடும் அரசின்
பக்கபல மாயிருக்கும் படியும்மை ஆக்கும்
போதுவரும்
நிம்மதிக்குப் பொறுப்பாளி என்றே
பொதுநலத்திற் குதவிடுங்கள் புண்ணியமாய்ப்
போகும்
காதுவழி
கேட்டும்மைக் காப்பதற்குச் சொல்லும்
கருத்துகளைக் கேட்டுணர்ந்து கவனமுறும் போது
தூதுவிடும்
காலனவன் தொடுவதில்லை பாரீர்
தொல்லையஃ(து)
அகல்வதற்கு நல்லவழி காண்பீர்
No comments:
Post a Comment