'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Nov 14, 2020

இறையருள் வேட்டல்

 கவிஞர் செந்தில் குமார்

 ஐயன் உறையு மாலய மொன்றே

ஆய்நல் அபய மளிக்கு மெனக்கே                1

 

கோடில் செலவு கொளுமிட முன்றன்    

கேடி லாத கோவில் ஒன்றே                            2

 

ஆநலம் காப்போய் பூநலம் காப்போய்

நாநலம் காவா நரனெனைக் காவே             3

 

பொன்னிழை இரியப் புன்னகை புனைந்தோய்

கண்கடை வழியும் கரிநீர் மாற்றே                               4

 

என்னிடை ஏதும் இல்லெதென் றறிந்தும்

மென்வளை இறுக்கி முறித்தல் ஏனோ         5

 

பொன்னொடு மணியும் பொருள்நிறை வேண்டேன்

கண்ணீ ரழிக்கக் கருதுளம் கொள்ளே         6

 

செம்பொன் கெடுநல்‌ செந்நிற முடையோய்

அம்பொன் கபாடம் அழைமின் திறவே        7

 

வானகம் நோக்கி மாவிழி விரித்தோய்

ஆணகம் நிறைந்தே அருள்நிறை செய்யே  8

 

இருபே ருலகும் ஈரடி அளந்தோய்

திருஇல் என்றன் தீத்துயர் ஒழியே                 9

 

பட்டால் கலையைப் பாங்குடன் அணிந்தோய்

முட்டுங் கண்ணீர் முற்றவு மருளே!               10

No comments:

Post a Comment