அன்பு தமிழ்ச் சொந்தங்களுக்கு வணக்கம்.
இதோ... தமிழ்ப்புத்தாண்டு (2052) பிறக்கிறது. ஆண்டாண்டு காலமாக நிலவியிருந்த தமிழர் பண்பாட்டைச் சிதைத்து அறிவுக்கொவ்வாத சித்திரையைப் புத்தாண்டாக மாற்றி, அடிப்படையிலிருந்தே ஆரிய வழிவந்தோர் என்ற கீழ்நிலையை உண்டாக்க எத்தனிக்கும் முயற்சிதான் சித்திரைப் புத்தாண்டென்பது.
தெலுங்கர்க்குத் தனிப்புத்தாண்டு இருக்கிறது.
மலையாளத்தார்க்குத் தனிப்புத்தாண்டு இருக்கிறது.
சைனர், பௌத்தர், சீக்கியர், இசுலாமியர், கிறித்தவர் என்று அவரவர்க்குத் தனிப்புத்தாண்டும், தொடராண்டும் வழங்கிவரும் நிலையில், மூத்த குடியாகிய நந்தமிழர் பண்பாட்டிற்கு ஊறுசெயும் விதமாகத் தங்களுக்கென்று தனிப்பண்பாடில்லாத வடவர் கூட்டம் நுழைத்த ஆரியப் புத்தாண்டை ஒழித்து, மறுத்து நம் முன்னோர் வழங்கிய அறிவின்பாற்பட்ட சுறவத்திங்களாம் தைத்திங்கள் முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டென்று எம்மினத்தோர் உணரத் தலைப்படுதல் நன்றாம்.
விழுமியங்களை விட்டுச் சென்ற முன்னோர்தம் செயலுக்குக் கேடு நேராதவாறு நாமும் நல் விழுமியங்களை நம் தலைமுறைக்கு விட்டுச் செல்வோம்.
நாம் தமிழினம்... வாருங்கள் சுறவப் புத்தாண்டைத் தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவோம்.
அன்புடன்
பாவலர் மா.வரதராசன்
No comments:
Post a Comment