அன்பானவர்களே வணக்கம்!
காலம் சுழன்று கொண்டுதானிருக்கிறது. ஆனால் காட்சிகள் பலவும் அப்படியேதான் இன்னும் தொடர்கின்றன. காலம் மாறும்போதும் இவை மாறாமல் தன் பழைய துருப்பிடித்த கதவை இழுத்து மூடியே வைத்திருக்கின்றன.
முடியாட்சிக் காலம்வரை முடிசூடி ஓங்கியிருந்த நந்தமிழ்மொழி, குடியாட்சிக் காலத்தில் ஆள்வோரின் உணர்வுக்குட்பட்டுச் சிதைவதும் தேய்வதும், பின் மொழியுணர்வேற்பட்டு மீள்வதுமாய்த் தன் வாணாளை ஓட்டிக் கொண்டிருக்கிறது.
தமிழ்நிலத்தை ஆண்ட தமிழ்மன்னர்கள் வரை எச்சிக்கலும் வந்ததில்லை. பிறநாட்டவர் ஆண்டபோது தொடங்கிய மொழிச்சிதைவு இன்றுவரை தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.
திராவிடர்கள் எனப்படும் பிற இனத்தைச் சார்ந்தோர் இந்த மொழிச்சிதைப்பில் முற்றிலும் வேறுபட்டு, நம் மொழி, இனம், நாடு என்பனவற்றையே இல்லாதாக்கி, அவற்றைத் "திராவிடம்" என்ற சுழலில் மூழ்கடித்து, இன்னும் கூடத் தொடர்ந்து அரசியல் இச்சையை, இனவெறியைத், தமிழின அழிப்பைத் தடையின்றிச் செய்து வருகின்றனர்.
நந்தமிழ்ப் பெரியோரும், செல்வங்களும் இதன் உண்மைத்தன்மையை அறியாதிருக்கும் அவலத்தைக் காணும்போது உள்ளம் மருகுகிறது... நோகிறது... தேய்கிறது. மாற்றம் வேண்டித் தமிழுணர்வை முன்னெடுப்போர்க்கு இந்தத் திராவிட வெறியர் சூட்டும் பெயர் "சாதிவெறித்தமிழன்".
ஏ தமிழ்மகனே! எப்போது விழிக்கப் போகிறாய்? உன்னைச் சுற்றியிருப்போர் தமிழர் என்ற போர்வையில் திரியும் "திராவிட நரிகள்" என்பதை எப்போது உணரப்போகிறாய்?
வா! தமிழினத்தை மீட்போம்!
தாளாத் துயருடன்...
பாவலர் மா.வரதராசன்
No comments:
Post a Comment