பைந்தமிழ்ச் சுடர் மெய்யன் நடராஜ்
தமிழ்போலொரு மொழிதானினி தரைமீதினில் வருமோ
தமிழோடுள சுவைபோல்பிற மொழியானவை தருமோ
உமிநீங்கிட வருமோரரி உணவாகிட வருமே
உயிர்போலுள தமிழ்மேலுன துணர்வோங்கிடத் தகுமே
அமிழ்தாம்தமி ழதையேகுடி அறிவோங்கிடு முறையே
அழகாய்விரிந் திடுமேமல ரதுபோல்தமிழ் மணமே
நிமிராதுள திதுநாயதன் பெருவாலென நினையா
திருந்தேதமிழ் படித்தாயெனில் நிறைவாகிடு முளமே
No comments:
Post a Comment