'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jun 15, 2019

பாவலர் பட்டத் தேர்வு 2018-19

சோலைக் கவிஞர்கள் கடந்த ஓராண்டாகப் பைந்தமிழ்ச் சோலையில் யாப்பிலக்கணத்தைக் குறித்த பயிற்சிகளிலும், தனித்தனியான கருத்தூட்டங்களிலும், வாதங்கள், ஐயங்கள் மூலமாகவும் "மரபு கவிதையில்" மிகுந்த பயிற்சியும், கற்றலையும் பெற்றார்கள்.

அந்த முயற்சிக்குத் தகுந்த சான்று வேண்டுமல்லவா? அப்போது தானே கற்றலின் நிலை முழுமையடையும்? மரபில் ஒன்றிரண்டு யாப்புகளை மட்டுமே தெரிந்து வைத்துக்கொண்டு, அவற்றையும் பிழைபட, இலக்கண நெகிழ்வுகளுடன் எழுதும் பலபேர் தங்கள் பெயருக்குமுன் பல பட்டங்களையும், விருதுகளையும் "ஒட்டிக்கொண்டு" உலா வருகின்றனர். அவ்வாறன்றிப் பைந்தமிழ்ச் சோலையின் மூலம் கற்ற யாப்புத் திறனைச் சோதித்து, அதற்கெனத் தேர்வையும் வைத்துப் பட்டம் வழங்கிக் கொண்டிருக்கிறது நம் பைந்தமிழ்ச் சோலை".

இதில் தேர்ச்சியுறும் கவிஞர்களுக்குப்,
1. பைந்தமிழ்ச்செம்மல் (உயர் தனிச் சிறப்பு வகுப்பு) 
2. பைந்தமிழ்ப்பாமணி (சிறப்பு வகுப்பு)
3. பைந்தமிழ்ச்சுடர் (முதல் வகுப்பு)

என்னும் பட்டத்துடன், அதற்கான சான்றிதழும் வழங்கப்பெறும். மற்றவர்களுக்குப் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பெறும். இந்தப் பட்டத்தைத் தங்கள் பெயருக்கு முன் பெருமையுடன் போட்டுக் கொள்ளலாம். "தேர்வெழுதி வாங்கிய பட்டம்" என நெஞ்சை நிமிர்த்திச் சொல்லலாம். பட்டங்களும், சான்றிதழும் சென்னையில் நடக்கவிருக்கும், நான்காமாண்டு சோலை விழாவில் வழங்கப்பெறும்.

பட்டத்தேர்வு நடைபெறவுள்ள நாள்கள் 
முதற்பிரிவு:  சூன் 20-21(வியாழன்,வெள்ளி) 
இரண்டாம் பிரிவு: சூன் 22-23 (சனி, ஞாயிறு)

பட்டத் தேர்வு எழுதும் மாணவக் கவிஞர்களுக்குப் பைந்தமிழ்ச் சோலையின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழன்புடன்,
மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

No comments:

Post a Comment