பைந்தமிழ்ச்சோலை இலக்கியப்பேரவை
திருவண்ணாமலைக் கிளையின் ஏழாம் கூடல்
பைந்தமிழ்ச்சோலை இலக்கியப் பேரவை திருவண்ணாமலைக் கிளையின் ஏழாம் கூடல் 30/05/2019 அன்று முனைவர் த.உமாராணி அவர்களின் நூல் வெளியீட்டு விழாவாக மிகவும் சிறப்புடன் நடந்தேறியது.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்விற்குத் தமிழாசிரியர் வெ.சங்கரநாராயணன் வரவேற்புரை யாற்றினார். திரு.செயராச சிவம் அவர்கள் தலைமை வகித்தார். மாவட்டக்கல்வி அலுவலர் திரு.சம்பத், எம்.என்.சேகர், கே.விழியரசு ஆகியோர் முன்னிலை யுரையாற்றினர்.
மதிப்பிற்குரிய மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஐயா நூலை வெளியிட திரு.பா.தீனன், முனைவர் அர.விவேகானந்தன், திரு.சி.பாலாஜி ஆகியோர் நூலைப் பெற்றுக்கொண்டனர்.
நூல் பற்றிய ஆய்வுரையைக் கவிஞர் நா.முத்துவேலன் மிகவும் சிறப்பாக நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து, பள்ளி துணை ஆய்வாளர் திரு.பாபு, திரு.மு.கங்காதரன், திருமதி.பவித்ரா நந்தகுமார், திரு.மு.சுகுந்த், திரு.எ.மோகன் ஆகியோர் வாழ்த்துரைக்க இனிதே நிறைவுற்ற விழாவில் திரளான சான்றோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment