'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jul 15, 2019

சந்தக் கவிமணி - பட்டத் தேர்வு - 2018-19


நான்காண்டுகளாக யாப்பிலக்கணப் பயிற்சியின் மூலம் பலரையும் மரபில் தேர்ந்த பாவலர்கள் ஆக ஆக்கிய பைந்தமிழ்ச்சோலையின் அடுத்த நற்செயலாகச் சந்தப் பாடல்களுக்கும், வண்ணப் பாடல்களுக்கும் தெளிந்த இலக்கணத்துடன் பயிற்சிகளையளித்துத் தேர்ந்த செம்மல்களை உருவாக்கிய பைந்தமிழ்ச்சோலை அந்தக் கவிஞர்களுக்காக ஒருதேர்வை நடத்தியது. யாப்பிலக்கணச் சோலையில் நடைபெற்ற சந்தம் பாடுக, வண்ணம் பாடுக, முயன்று பார்க்கலாம் ஆகிய பயிற்சிகளை உள்ளடக்கிய கடின யாப்புகளைப் படைக்கும் விதமாக அமைந்த இத்தேர்வில் பைந்தமிழ்ச்சோலை நடத்திய பாவலர் பட்டத் தேர்வுகளில் பைந்தமிழ்ச்செம்மல் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே பங்குபெற்றார்கள். 30/06/2019 ஞாயிற்றுக்கிழமை அன்று தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்று, 75 மற்றும் அதற்குமேல் மதிப்பெண் பெற்ற கீழ்க்கண்ட செம்மல்கள்  பட்டம் பெறுகிறார்கள்.

1.   தமிழகழ்வன் சுப்பிரமணி
2.   சியாமளா ராஜசேகர்
3.   மன்னை வெங்கடேசன்
4.   விவேக்பாரதி
5.   அர. விவேகானந்தன்
6.   வள்ளி முத்து
7.   பரமநாதன் கணேசு
8.   நிர்மலா சிவராசசிங்கம்

சந்தக்கவிமணி பட்டம் பெற்ற எண்மருக்கும் வாழ்த்துகள். வெற்றி பெற்றோர்க்குப் பைந்தமிழ்ச் சோலையின் நான்காமாண்டு விழாவில் பட்டம் வழங்கப்படும்.
தமிழன்புடன்
மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்a

No comments:

Post a Comment