சரஸ்வதிராசேந்திரன்
வஞ்சித்தாழிசை
| 
   
தூக்கம் விடுத்தே 
ஆக்கம் பெருக்கி 
ஊக்கம் உயர்ந்தால் 
பூக்கும் வாழ்க்கை 
மனமும் திளைத்துத் 
தினமும் உழைத்து 
வனத்தை காத்தால் 
தேனாய் வாழ்க்கை 
அறிவை வளர்த்துச் 
செறிவை புகுத்தித் 
துறந்திடும் பொய்யால் 
சிறந்திடும் வாழ்க்கை 
 | 
  
   
வறுமை நீக்கிச் 
சிறுமை விடுத்துக் 
கருமை அழித்தால் 
பெருமை வாழ்க்கை 
சோதனை சகித்து 
வேதனை விடுத்துப் 
போதனை ஏற்றால் 
சாதனை வாழ்க்கை 
மனமும் விரிந்து 
குணமும் நிறைந்து 
பணமும் மிகுந்தால் 
மணமாம் வாழ்க்கை 
 | 
 
No comments:
Post a Comment