'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jul 15, 2019

இலக்கியச் சாரல் - 3


முனைவர் த. உமாராணி

இன்பம்

‘இனிது இனிது ஏகாந்தம் இனிது’

என்ற ஒளவையின் வரிகளுக்கேற்பத்  தனித்து வாழ்ந்து, இன்பத்தைத் தந்துகொண்டிருப்பது தமிழ். தமிழ் என்றுமே இனிமை. தமிழை யேற்றிருக்கும் இலக்கியங்களும் இனிமைதான். படிக்கும்போது மட்டுமா இனிக்கும்! இல்லை நினைக்கும் போதெல்லாம் இனிமை தருவது இலக்கியம் மட்டுமே! எப்படி?

தன்னிலை மறக்கும்
முன்னிலை வகிக்கும்
நன்மையை நல்கும்
கன்னித்தமிழ்க் காவியமே!

கண்ணிலே கனவாய்
மண்ணிலே மகுடமாய் 
விண்ணிலே வெண்ணிலவாய்…
தண்டமிழ்த் தமிழ்மொழியே

நம்முள் எழிலாய்
நம்நாட்டில் ஏகாந்தமாய்
நம்மனத்தில் இசையாய்
நம்முயிரில் இலக்கியமே!

உலக உயிர்களில் அரிதான பிறவி மானிடப் பிறவியே. மனம் என்ற மகத்தானதொரு ஆறாவது அறிவைப் பெற்றவன் மனிதன் மட்டுமே! அத்தகைய மனமானது துன்பத்தை விலக்கி இன்பத்தை விரும்புகின்றது; இன்பத்தைத் தேடுகின்றது. எங்கே கிடைக்குமென ஏங்குகின்றது. இத்தகைய இன்னலைப் போக்குவதற்கான வழி ஒன்றே. அது இலக்கியங்களைப் படித்தலே ஆகும்.

எழுத்துகள் எளிமையாய்க் காட்சி அளித்தாலும், வானவில்லைப் போன்று பல வண்ணங்களைத் தன்னுள் புதைத்து வைத்துள்ளது. அதைக் கண்டெடுக்க வேண்டுமானால், இலக்கியத்தை நுகர வேண்டும். நுகர்ந்து இனிமையான இன்பத்தை அனைவரும் அடைவோமாக! நற்றமிழர் வாழ்க! நற்றமிழ் வளர்க!!

No comments:

Post a Comment