'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jul 15, 2019

பாவலர் பட்டத் தேர்வு 2018-19


முகநூல் வரலாற்றில், தமிழின் சிறப்பைப் பரப்புவதையே தலையாய நோக்கமாகக் கொண்டு மரபு கவிதைக்கென்று தனிச்சிறப்பான குழுமமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பைந்தமிழ்ச்சோலை முகநூற் குழுமம், யாப்பிலக்கணப் பயிற்சியளித்து, அதற்கென்று தேர்வும் வைத்து, அத்தேர்வின் அடிப்படையில் பட்டங்களை வழங்கி வருவதை அனைவரும் அறிவீர். இக்குழு நடத்திய 2018-19 ஆண்டிற்கான பாவலர் பட்டத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப் பட்டுள்ளன.

மிகச்சிறப்பாக நடைபெற்ற இத்தேர்வில், 91 முதல் 100 வரையான மதிப்பெண்களைப் பெற்று உயர்தனிச்சிறப்பு வகுப்பில் தேர்ச்சியும், சோலையின் மிகவுயர்ந்த பட்டமான பைந்தமிழ்ச்செம்மல் பட்டமும் பெறும் கவிஞர்கள்:
1.   கவிஞர் சாமி.சுரேசு
2.   கவிஞர் ஏகாபுரம் வெங்கடேசு
3.   கவிஞர் செல்லையா வாமதேவன்
4.   கவிஞர் இரா.கண்ணன்
5.   கவிஞர் மோகனசுந்தரம்
6.   கவிஞர் வஜ்ஜிரவேலன் தெய்வசிகாமணி

81 முதல் 90 வரையான மதிப்பெண்களைப் பெற்றுச் உயர்சிறப்பு வகுப்பில் தேர்ச்சியும், பைந்தமிழ்ப்பாமணி பட்டமும் பெறும் கவிஞர்கள்:
1.   கவிஞர் ஜெனிதா
2.   கவிஞர் பாலாஜி சஞ்சீவி
3.   கவிஞர் மதுரா
4.   கவிஞர். அழகர்சாமி
5.   கவிஞர் சரஸ்வதி ராஜேந்திரன்
6.   கவிஞர் நெடுவை இரவீந்திரன்
7.   கவிஞர் ஷேக் அப்துல்லா
71 முதல் 80 வரையான மதிப்பெண்களைப் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சியும், பைந்தமிழ்ச்சுடர் பட்டமும் பெறும் கவிஞர்கள்:
1.   கவிஞர் மாலதி திரு
2.   கவிஞர் சோதி.செல்லதுரை
3.   கவிஞர் கற்றுப்பட்டு தாரா
4.   கவிஞர். கோபாலகிருட்டினன்
5.   கவிஞர் முருகானந்தம்
6.   கவிஞர் கந்தையா நடனபாதம்
7.   கவிஞர் P.S மணியன்

40 முதல் 69 வரையான மதிப்பெண்களைப் பெற்றுச் தேர்ச்சியடைந்த கவிஞர்கள்:
1.   கவிஞர் அபு முஜாகித்
2.   கவிஞர் தம்பிதுரை குணதிலகம்
3.   கவிஞர் ஜோதிபாஸ் முனியப்பன்
4.   கவிஞர். சுபாஷினி ரமணன்
5.   கவிஞர் நாகராஜன்

பட்டங்களும், சான்றிதழும் நடக்கவிருக்கும், நான்காமாண்டு சோலை விழாவில் வழங்கப் பெறும். அனைவருக்கும் பைந்தமிழ்ச் சோலையின் சார்பிலும், அனைத்துக் கவிஞர்கள் சார்பிலும் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

தமிழன்புடன்
மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

No comments:

Post a Comment