'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jul 15, 2019

இற்றைத் திங்கள் இவரைப் பற்றி



கவிக்கோ துரை. வசந்தராசன்

தேனினும் இனிய பாக்களால்  எழுச்சிமிகு சமுதாயத்தை உருவாக்கப் பாடுபடுவர். சிறந்த மரபு கவிஞர். அறிஞர் பலராலும் பாராட்டப்பட்டவர். பாவேந்தர் பரம்பரையின் விழுது எனப் புலவர் புலமைப்பித்தனால் பாராட்டப்பட்டவர் கவிக்கோ துரை. வசந்தராசன் அவர்கள்.

அவர் 01-06-1955 அன்று வேலூர் மாவட்டம் குருவராசப்பேட்டை என்னும் ஊரில் பிறந்தார். இவரைப் பெற்றோர் திருவாளர் வீ.மு.துரைவேலு - திருவாட்டி கன்னியம்மாள் ஆவர். இவர் எம்.ஏ., பி.எஸ்.சி., பி.ஜி.எல்., டி.லிட் எனப் பல துறைகளில் பட்டங்களைப் பெற்றார். இவருடைய இல்லத்தரசி திருவாட்டி சாந்தகுமாரி அவர்கள். இவர்களுக்கு இளந்தேவி, இளங்குமரன், இளம்பாரதி என மூன்று செல்வங்கள். இவர் பொதுத்துறை நிறுவனத்தில் கூடுதல் மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

இலக்கியப் பணி: தாம் வாழும் மாதவரம் பால் பண்ணைப் பகுதியில் பண்ணைத் தமிழ்ச் சங்கம் நிறுவி 1984-இல் இருந்து தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அச்சங்கத்தின் வாயிலாக,
·        ஆண்டுதோறும் மறவர் பொன்னம்பலனார், பாவேந்தர் பாரதிதாசன், அறிஞர் அண்ணா, தமிழ்மாமுனி மங்கலங்கிழார், அன்னைதெரசா, திருவள்ளுவர், வள்ளலார், பாவாணர், சி.பா. ஆதித்தனார் ஆகியோர் பெயர்களில் விருதுகள் வழங்கித் தமிழ் மற்றும் சமுதாயத் தொண்டு செய்வோரைச் சிறப்பித்தலோடு தமிழ் ஆர்வலர் களுக்கும் 'அருந்தமிழ் ஆர்வலர்' என்ற விருது வழங்கிச் சிறப்பித்தல்.

·        சிறந்த பத்து இலக்கிய அமைப்புகளுக்குப் பாராட்டு விருதுகள் வழங்கிச் சிறப்பித்தல்.
·        ஆண்டுதோறும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு கல்வியிற் சிறந்த மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி, அவர்தம் பெற்றோரையும் சிறப்பித்தல்.

·        மாதந்தோறும் இலக்கிய நிகழ்வுகள் நடத்தி, அதில் சிறந்த கவிஞர் ஒருவருக்கு விழுதுக் கவிஞர் விருதும், சிறந்த படைப்பாளர் ஒருவருக்குப் பேராசிரியர் பு.மு.கங்காதரனார் விருதும் வழங்கிச் சிறப்பித்தல்.

·        பாவேந்தர் நூற்றாண்டில் நூறு தமிழ்க் கவிஞர்கள், இலக்கிய அமைப்பாளர்கள், இதழாசிரியர்கள், தமிழ்த்தொண்டர்கள், திறனாய்வாளர்கள், ஆர்வலர்கள்  ஆகிய 170 பேருக்கு பாவேந்தர் விருது வழங்கிச் சிறப்பித்தமை

·        பிற இலக்கிய அமைப்புச் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருத்தல் என அருந்தமிழ்ப் பணியாற்றி வருகிறார்.

“தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் கொள்கைவழி நடக்கும் சிறந்த கவிஞர்; இலக்கிய நிகழ்ச்சிகள் பல நடத்திக் கவிஞர் பலருக்கு விருதுகளை அளித்து மகிழ்ந்திடும் ஆற்றலாளர்” என முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்  அவர்களால் பாராட்டப் பட்டவர்.

·        இவர் எழுதிய நூல்கள்:
1. குற்றங்களே தீர்ப்பெழுதினால்
2. சூரியச் சிறகுகள்
3. கறுப்பு வெளிச்சம்

·        தொகுத்த நூல்கள்
1. கொஞ்சம் நில்லுங்கள்
2. வானவில் குதிரைகள்

·        வெளிவரவிருக்கும் நூல்கள்
1. கவிக்கோ துரை வசந்தராசன் கவிதைகள் - தொகுதி 1
2. கவிக்கோ துரை வசந்தராசன் கவிதைகள் - தொகுதி 2
3. நறுந்தொகை
4. முகநானூறு
5. குறுங்கால் வானம்
6. கவிக்கோ துரை வசந்தராசன் படைப்புத் திறன்
(பேராசிரியர் பெருமக்கள், திறனாய்வாளர்கள் ஆய்வுக் கட்டுரை)

·        இவருடைய படைப்புகள் தாங்கிய இதழ்கள்:
1. முல்லைச் சரம்
2. வண்ணப் பூங்கா
3. பாசறை
4. மாலை முரசு
5. தமிழ்ப்பணி
6. கவிக்கொண்டல்
7. கல்கி
8. தாய்மண்
9. கவிதை உறவு
10. முகம்
11.இலக்கியச் சோலை
12. அரும்பு
13. உரத்த சிந்தனை
14. வைகை மற்றும் பல இதழ்கள்

இவர் பெற்ற சிறப்புகளும் விருதுகளும்:
1. பாரதி பட்டயம்
2. கவிக்கோ
3. இளைய பாவேந்தர்
4. நெருப்புக் கவிஞர்
5. இலக்கிய மாமணி
6. பைந்தமிழ்ப் பாதுகாவலர்
7. செந்தமிழ்க் கவித்தொண்டர்
8. இலக்கிய மாமணி
9. பல்கலை வித்தகர்
10. கவிதைச் சித்தர்
11. கவித்திலகம்
12. தமிழின் சீர் பரவுவார்
13. எழில் கவித்தென்றல்
14. மரபு ஒளிச்சுடர்
15. கவிச் சாகரம்
16. தமிழ்க் கவிச் சுடர்

1. பாவேந்தர் விருது (2 முறை)
2. பாவேந்தர் பரம்பரைப் பாவலர் விருது (2 முறை)
3. கவிதை உறவு சிறப்பு விருது
4. இலக்கியச் சோலை ஆண்டுவிழா விருது
5. தமிழ் மாமணி மங்கலங்கிழார் விருது
6. தேவநேயப் பாவாணர் விருது
7. பாரதியார் ம.பொ.சி நினைவு விருது
8. செந்தமிழ் மாமணி விருது
9. அமுதத் தமிழ் ஆய்வரங்க விருது
10. கவிஞானி விருது
11. கண்ணதாசன் விருது
12. தமிழ்ப்பணிச் செம்மல்
13. மகாகவி ம.பொ.சி விருது
14. பேராசிரியர் பு.மு.கங்காதரனார் விருது
15. செந்தமிழ்ச் சுடர் எனும் திருவள்ளுவர் விருது
16. வாழ்நாள் சாதனையாளர் விருது

படைப்புகளைச் சிறப்பித்த ஆய்வுகள்
1. பேராசிரியர் உண்ணாமலை (மித்ரா) அவர்களின் முனைவர் பட்ட ஆய்வேடு
2. படைப்பிலக்கியப் பாதைகளில் எண்பதுகளும் தொண்ணூறுகளும்
3. காலம் வெல்லும் கவிதைகள் - திறனாய்வு நூல்
முகப்போவியமாய் அலங்கரித்த இதழ்கள்
1. முல்லைச் சரம்
2. வள்ளிப் பூங்கா வாசன்
3. இலக்கியச் சோலை

இவர் இனமான பேராசிரியர் க.அன்பழகன், மானமிகு கி.வீரமணி, திருவாளர் ஜி.கே.வாசன், முனைவர் சிலம்பொலி செல்லப்பனார், கவிக்கோ அப்துல்ரகுமான், கவிஞர் ஈரோடு தமிழன்பன், பேராசிரியர் க.பொன்முடி, இலக்கியச்செல்வர் குமரி அனந்தன், கவிஞர் முத்துலிங்கம், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், கவிப்பேரருவி பழநிபாரதி, முத்தமிழ்க் கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ. மோகனரங்கம் உள்ளிட்ட பல தமிழறிஞர்களாலும் தலைவர்களாலும் பாராட்டப்பெற்றவர்.

இவருடைய முகவரி:
மனை எண் 45, மூன்றாவது வீதி,
வங்கிக் குடியிருப்பு,
மாதவரம் பால் பண்ணை,
சென்னை 600 051

7 comments:

  1. இன்னும் பெரிய வெளிச்சத்திற்கு கொண்டு சேர்க்கப்பட வேண்டிய வெளிச்சம் அவர் ! உண்மை !

    ReplyDelete
  2. மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் 'பா' பண்ணை வளர்க்கும் இவர் ஒரு இலக்கிய விவசாயி. தன்னை முன்னிலை படுத்தாமல் 'கவி' உறவுகளுக்கு முகவரி வழங்குவதில் முன்னிலையில் இருப்பவர்: த. செயராமன்

    ReplyDelete
  3. அமீரகத்தில் அவரை நேரில் சந்தித்தது எங்கள் பாக்கியம். கீதா ஸ்ரீராம்

    ReplyDelete
  4. நல்ல மனம் படைத்த தலைவர், மாமனிதர்,எல்லோருக்கும் வாய்ப்பளித்து சிறப்புப் செய்பவர் என்னையும் ஒரு பொருளாய் நல்வழி காட்டியவர் அவர் தொண்டு சிறப்பானது,அவரை வாழ்த்துவதை விட வணங்குகிறேன்.

    ReplyDelete
  5. வசந்தராசன் என்னும் வரலாறு
    வரிகளுக்கள் அடங்காது ஆனாலும்
    சித்திரம் மெத்த அழகு.. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. தஞ்சை மயிலரசன்

    ReplyDelete
  7. நல்ல மனம் கொண்ட தமிழ் ஆர்வலர்.. வாழ்க பல்லாண்டு

    ReplyDelete