'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jul 15, 2019

இலக்கியக் கூடல் – 8


பைந்தமிழ்ச்சோலை இலக்கியப்பேரவை  திருவண்ணாமலைக் கிளையின் 
இலக்கியக் கூடல் – 8

பைந்தமிழ்ச்சோலை இலக்கியப் பேரவை திருவண்ணாமலைக் கிளையின் எட்டாம் இலக்கியக்கூடல் தேவிகாபுரம் பெண்கள் பள்ளியில் 16.06.19 அன்று தமிழ்த்திரு. ருக்கேசுகுமார் முன்னெடுப்பில் மிகவும் சிறப்புற நடைபெற்றது.

பாவலர் எ. மோகன் அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்திசைக்க, நிகழ்வு இனிதே தொடங்கியது. திரு.ருக்கேசுகுமார் அனைவரையும் வரவேற்றார். கவிஞர் சேகர் நாகரத்தினம் தலைமையுரை நிகழ்த்தினார். முனைவர் அர.விவேகானந்தன் சோலையின் நோக்கம் குறித்து உரையாற்றினார். புலவர் அந்தணர்கோ மற்றும் பள்ளித் தலைமையாசிரியர் எம்.சரவணன், தமிழ்த்திரு சி.பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திறனாய்வு செம்மல் வே.எழிலரசு அவர்கள் 'பண்டைய இலக்கியம்' எனும் தலைப்பில் மிகச்சிறந்த உரையாற்றி  சங்க இலக்கியங்கள் செவ்விலக்கியமாகத் திகழ்வதை நிலைநிறுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

தொடர்ந்து மழலைகள் செழியன் மற்றும் சுடர்விழி ஆகியோர் தங்களின் சிறார் பாடல்கள் மூலம் அனைவரையும் மகிழ்வித்தனர். நிகழ்வில் முத்தாய்ப்பாகப் பைந்தமிழ்ச் செம்மல் தமிழகழ்வன் தலைமையில் 'சங்ககாலக் காதலும் எங்கள் காலக் காதலும்' எனும் தலைப்பில் மனத்திற்கினிய கவியரங்கம் சிறப்புற நடைபெற்றது. பாவலர் ஜெய்சங்கர், பாவலர் அமலா, பாவலர் மோகன், பாவலர் ரேவதி முருகதாசு ஆகியோர் தங்கள் கவிதைகளால் அரங்கைக் கட்டிப் போட்டனர்.

இறுதியாக, பாவலர் மோகன் நன்றி நவில, நிகழ்வு இனிதே நிறைவையெட்டியது. இந்த நிகழ்வில் திரு.ம.முத்துசாமி, திரு.ஆர்.ஐ.முருகன், திரு.லோகநாதன், தமிழ்த்திரு.கலைவாணி உள்ளிட்ட சான்றோர் பெருமக்களும் தமிழ்ச் சான்றோர்களும் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இறுதியில் பிரிய மனமின்றி அடுத்த கூடலை நெஞ்சில் சுமந்து அனைவரும்  இல்லமடைந்தனர்.

No comments:

Post a Comment