1. கவிஞர் பொன். இனியன்
பணைத்தெழுந்து நில்லு; பகையெதையும் வெல்லு;
குணத்தைமிகப் பொல்லு; குறிதவறா தொல்லு;
அணைபோடு வெள்ளம் வருமுன்; அறிவின்
துணையோடு வாழ்க துணிந்து!
2. கவிஞர் செல்லையா வாமதேவன்
வருந்தடை யெல்லாம் வரட்டும் வழுக்கள்
திருத்தித் தினமும் திறமை - பெருக்கி
இணையேது மில்லா தெமையாளும் ஈசன்
துணையோடு வாழ்க துணிந்து.
3. கவிஞர் வ.க.கன்னியப்பன்
உலகினில் வாழ்ந்திட ஒவ்வொருவர் உற்ற
நலமிக்க இல்லாளை, நாடுந் - திலகப்
பிணைப்பெனத் தேர்ந்து பெருமையுடன் பேணித்
துணையோடு வாழ்க துணிந்து
No comments:
Post a Comment