'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jul 13, 2020

வனமோகினி

பைந்தமிழ்ப் பாமணி மதுரா

சந்தக் கலிவிருத்தம்

மலைமீதினி லழகாயொரு மலராகவும் பூத்தாள்
சிலைபோலவ ளழகேயது சிறகாயவள் நீத்தாள்
வலைவீசிடு மலைபோலவள் வனமோடியும் பார்த்தாள்
நிலைமாறிய நதியாகவு நிறைவோடவள் பாய்ந்தாள்

விடிகாலையி லெழுஞாயிறு விரிவாயொளி வீசி
அடிவானிலு மரங்கேறிய அழகாயொரு காட்சி
மடிமீதினில் விளையாடிடு மெழிலோவியம் போல
வடிவாகவு முருமாறிய வனமோகினி யாளே

கனவோடொரு விடிகாலையில் கதிராயவ ளெழவே
மனமீதினி லுருவாகிய மழகோவிய மானாள்
வனமோடிடு நதிபோலொரு வளமேயவ ளீந்தாள்
நனவாகிய கனவோயென நடமாடிடு மவளே!

No comments:

Post a Comment