'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jul 14, 2020

விதியென விலகுதல் தவறாமே!


பைந்தமிழ்ச் செம்மல் 
செல்லையா வாமதேவன் 

வண்ணப்பா

(தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன தனதானா)

புதிர்நிறை உலகினில் அழகென வலம்வரு
  புதிதுமுன் பழையவை                  களையாமோ?
    புலரிள கதிரவன் நதிதவழ் மலையொடு
      பொழிமழை பழமையின்          தொடராமே
மதிநிறை முதியவர் அனுபவ அறிவுரை
  மணியென உளமதில்                    உணர்வாயே
    மடமையும் மறதியும் அயர்வது தடையுடை
      மனமதில் உறுதியொ                டெழுவாயே
கதிர்நிறை வயலிடை எழுசில களையவை
  களையவும் முதிர்வது                    விளைவாமே
    கனிவுள உளமதில் நுழைசில கயமைகள்
      களையவை களைவது               நலமாமே
விதியென, விழைபவை இடியொடு முடிகையில்
  விலகுதல் அறிவுள                          செயலாமோ?
    வியர்வையின் நெடியொடு வினைபல முயலுதல்
      வியனதை அடைவதன்              வழியாமே!

No comments:

Post a Comment