'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jul 14, 2020

நிறைவுளதாக்கும்


கவிஞர் சரஸ்வதி ராசேந்திரன்

வஞ்சித்துறை

மறைமொழி ஏற்று
முறையுடன்  வாழ்ந்தே
இறைவனைச் சேர்தல்
நிறைவுள தாக்கும்                           1

சிவமாய்ப் பழுக்கும்
தவத்தால் ஆகும்
அவனியைக் காக்கும்
உவப்புடை தாக்கும்                         2

வேதம் ஓதிப்
பாதம் தொழுவோம்
சேதம் இன்றிச்
சாதக மாக்கும்                                  3

செல்லும் வழியில்
சொல்லும் திறத்தால்
வெல்லும் வகைதான்
எல்லாம் எளிதாக்கும்                       4

பயமிலா வாழ்வும்
அயர்விலா உழைப்பும்
நயமிகு தேர்வும்
உயர்வுள தாக்கும்                            5

No comments:

Post a Comment